தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா போட்ட புது திட்டம்! அதிமுக அதிர்ச்சி!

Photo of author

By Sakthi

கர்நாடகாவை போல் தமிழ்நாட்டிலும் ஆட்சி அமைப்போம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் தெரிவித்திருக்கின்றார்.

சென்ற மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தது, பாரதிய ஜனதா கட்சி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடரும் என்று அந்தக் கட்சியின் முக்கிய தலைவரான அமித்ஷா முன்னிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார், இருந்தாலும் கூட்டணி பற்றி எந்த ஒரு விஷயத்தையும் அமித்ஷா பேசவில்லை.

தேர்தலில் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என்று அந்தக் கட்சியின் தமிழக தலைவர் முருகன் தெரிவித்திருக்கின்றார். அதோடு தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு எச் ராஜா தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநாடு நேற்று தினம் சேலத்தில் இருக்கின்ற ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அந்த விழாவில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி மாநிலத் தலைவர் முருகன் மற்றும் இல .கணேசன் பொன் ராதாகிருஷ்ணன் ராஜா போன்றோர் பங்கேற்பார்கள் வேளாண் சட்டங்கள் கொண்டு வந்ததன் மூலம் ஆக தமிழக மக்கள் எவ்வாறு பயன் அடைகிறார்கள் என்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

அந்த சமயத்தில் பேசிய முருகன், வேல் யாத்திரை தமிழகம் முழுவதிலும் ஒரு எழுச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. நம்முடைய கட்சியை தமிழ்நாட்டின் ஒவ்வொரு தெருவிலும் கொண்டு சேர்த்து இருக்கின்றது. அதற்கு இன்னொரு காரணமும் தொண்டர்களும் தடைகளை தாண்டி சென்ற அவர்களுடைய முயற்சிகள்தான் யாத்திரையின்போது கோயம்புத்தூர், கடலூர், விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் மிகப் பெரிய அளவில் கூட்டம் சேர்ந்தது அது தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஒரு பயத்தை உருவாக்கி இருக்கின்றது என்று அவர் தெரிவித்தார்.

கடைசியாக உரை நிகழ்த்திய சி.டி.ரவி திராவிட முன்னேற்ற கழகம் தன்னுடைய குடும்ப நலனுக்காக பாடு படுகின்றது, பாரதிய ஜனதா கட்சி மக்கள் நலனுக்காக பாடுபடுவது சட்டங்களை அமல்படுத்திய பின்னரும் கூட பல மாநிலங்களில் நம் கட்சி வெற்றி பெற்றிருக்கின்றது. கர்நாடகாவை போல தமிழ்நாட்டிலும் கேரளாவிலும். நம் கட்சி ஆட்சியில் அமரும் என்று தெரிவித்தார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா இருக்கின்ற நிலையில். அவருடைய இந்த பேச்சானது சர்ச்சைக்கு வழிவகை செய்து இருக்கின்றது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து தான் ஆட்சியைப் பிடித்தது பாரதிய ஜனதா கட்சி என்ற குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையிலே அதேபோல தமிழகத்திலும் ஆட்சியை பிடிப்போம் என்று ரவி தெரிவித்திருக்கிறாரா? என்ற கேள்விகளும் எழுகின்றன.