ADMK BJP: தமிழக அரசியல் களத்தில் தற்போது புதிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2 நாட்களாக கரூரில் நடந்த மரணத்தை பற்றிய செய்தி தான் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. தற்போது அதன் புதிய திருப்பமாக அதிமுகவில் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது. தேர்தல் நெருங்குவதற்கு 1 வருடத்திற்கு முன்பே அதிமுக-பாஜகவுடன் கூட்டணி அமைத்து விட்டது.
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்ட போது கட்சியின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாமலிருந்தால் பாஜகவிற்கு அதிக சீட்டுகள் ஒதுக்கப்படும் என்று இபிஎஸ் அமித்ஷாவிடம் கூறியதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து பாஜகவும் அதிமுக தலைமையிடம் கொங்கு மண்டலத்தை கேட்டு வலியுறுத்தியதாக கூறப்பட்டது.
இப்போது அவர்கள் கேட்ட தொகுதியை ஒதுக்காவிட்டால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கப்படும் என்று அவர்கள் கூறியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுகவிலிருக்கும் கூட்டணி கட்சிகள் அனைத்தும் விஜய்யை மையமாக வைத்து காய் நகர்த்துவது போல பாஜகவும் அதன் ஆட்டத்தை ஆட தொடங்கியுள்ளது.
ஏற்கனவே அதிமுக உடன் பாஜகவை தவிர வேறு எந்த கட்சியின் கூட்டணியும் உறுதி செய்யப்படாததால் இபிஎஸ் இந்த கோரிக்கைக்கு சம்மதம் தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த கோரிக்கையால் அதிமுகவின் உள் வட்டாரத்தில் சலசலப்பு நிலவுவதாகவும், பலர் கட்சியை விட்டு விலகுவதாகவும் கூறப்படுகிறது. அதிமுக தற்போதுள்ள நிலைமையில் பாஜகவின் கூட்டணியையும் இழந்து விட்டால் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன.