தமிழக அரசு ஊழல் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் அண்ணாமலை கிளம்பிய புயல்! நடுக்கத்தில் திமுகவினர்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக ஒரு வாரத்தில் பட்டியல் வெளியிடப்படும் என்றும், 2 அமைச்சர்கள் தொடர்பான ஆதாரத்தைக் வெளியிடவிருக்கிறோம் என்றும், தெரிவித்திருக்கிறார்.

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை 2 அமைச்சர்கள் பதவி விலக வேண்டிய நிலை வரும் என தெரிவித்திருக்கிறார்.

அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாகவும், அவர் பேசியது தொடர்பாகவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னை பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது உரையாற்றிய அண்ணாமலை முதலமைச்சர் மேடையில் பேசுவது திமுக அரசியல் மேடை பேச்சாக இருந்தது என தெரிவித்தார்.

சமூகநீதி தொடர்பாக நேற்று முதலமைச்சர் உரையாற்றினார் அதே மேடையில் ராஜகண்ணப்பன் பற்றி பேசியிருக்க வேண்டும் அவருடைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எப்படி செயல்பட்டார்கள், அவர்கள் எவ்வாறு உரையாற்றினார்கள், என்பதை முதலமைச்சர் அதே மேடையில் சொல்லியிருக்க வேண்டும்.

2021 ஆம் ஆண்டில் அண்டை மாநிலமான கர்நாடகம் தமிழ்நாட்டை விட 6 மடங்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்திருக்கிறது. ஆனால் தமிழர்களுக்கு அவ்வாறு எந்த ஒரு பெரிய முதலீடும் வரவில்லை, இதுதான் திராவிட மாடலா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அத்துடன் வருவாய் இழப்பு யாருக்கு ஏற்பட்டிருக்கிறது? எதை அவர் கூறுகின்றார்? காங்கிரஸ் ஆட்சி காலத்தை விட இரண்டரை மடங்கு அதிகமாக 2014 ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரையில் தமிழகத்திற்கு வரி வருவாய் மத்திய அரசு வழங்கியிருக்கிறது.

ஜிஎஸ்டி கவுன்சில் என்ன மாதிரியான முடிவு எடுத்து நிதி கொடுத்து வருகிறது? அதில் பிரதமரோ. அமைச்சரோ, தலையிட முடியாது. இது முதலமைச்சருக்கு தெரியுமா? அல்லது தெரியாதா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

25 ஆயிரம் கோடி ரூபாயை தமிழக அரசு மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதனை எதற்காக முதலமைச்சராக மறைக்கிறார்? அது தொடர்பாக அவர் ஏன் பேசவில்லை? கச்சத்தீவை உங்களால் மீட்டெடுக்க முடியாது.

அதனை வைத்து எதற்காக நாடகம் ஆடுகிறார்கள், தமிழகத்தில் தமிழை வைத்து அடிப்படை கல்வியாக கொண்டுவர முடியாமல் இருக்கிறார்கள். இதனை எதனால் செய்ய முடியவில்லை என வரிசையாக குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருக்கிறார் அண்ணாமலை.

தமிழகத்தில் அமைச்சர்கள் ஊழல் தொடர்பாக ஒரு வார காலத்தில் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்த அவர், 2 துறை அமைச்சர்கள் தொடர்பான முழுமையான ஆதாரத்தை வெளியிடவிருக்கிறோம் இந்த அமைச்சர்கள் பதவி விலக வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என தெரிவித்தார்.

அதேபோல தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுந்திருக்காதது குறித்து கேள்வி எழுப்பியபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நிதின்கட்கரி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் இருந்திருக்க வேண்டும். இதனை தவிர வேறொன்றும் இருக்க முடியாது என்று அண்ணாமலை பதிலளித்தார்.