தமிழகத்தில் பாஜக அதன் கூட்டணிக் கட்சிகளை மறைமுகமாக மிரட்டுகிறதா?
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை விட சில இடங்களில் அதிகமாக வெற்றி பெற்றாலும் ஏறக்குறைய இரண்டு கட்சிகளும் சம பலத்துடன் உள்ளதாகவே கருதப்படுகின்றது. ஆனால் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மற்ற கட்சிகள் எதுவும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.
இதில் விதி விலக்காக அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக போட்டியிட்ட இடங்களில் ஏறக்குறைய பாதி இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு அடுத்து 3 வது கட்சி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சியான பாஜக மற்ற கட்சிகளை விட அதிகமான இடங்களில் போட்டியிட்டு அதில் 10 சதவீத இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.
அதிமுக :
மாவட்ட கவுன்சிலர்:
வெற்றி – 214
போட்டியிட்டது – 435
ஒன்றிய கவுன்சிலர்:
வெற்றி – 1781
போட்டியிட்டது -3842
பாமக :
மாவட்ட கவுன்சிலர்:
வெற்றி – 16 (தோராயமாக)
போட்டியிட்டது -36
ஒன்றிய கவுன்சிலர்:
வெற்றி – 224
போட்டியிட்டது -430
தேமுதிக :
மாவட்ட கவுன்சிலர்:
வெற்றி – 3
போட்டியிட்டது -29
ஒன்றிய கவுன்சிலர்:
வெற்றி – 99
போட்டியிட்டது -434
பாஜக :
மாவட்ட கவுன்சிலர்:
வெற்றி – 7
போட்டியிட்டது -81
ஒன்றிய கவுன்சிலர்:
வெற்றி – 85
போட்டியிட்டது -535
இந்நிலையில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் பாஜகவிற்கு அதிமுக வழங்கிய இடங்கள் போதவில்லை என்று விமர்சனம் செய்திருந்தார். அதே போல பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் பேசிய போதும் அதிமுகவை விமர்சிக்கும் வகையிலேயே குறிப்பிட்டிருந்தார்.
கடந்த காலத்தில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக மற்றும் பாமக கட்சிகள் வாங்கிய வாக்குகளின் சதவீதத்தை பார்க்கும் போது பாமகவை விட பாஜக குறைவான வாக்கு வங்கியை தான் வைத்துள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாமகவை விட பாஜக அதிக இடங்களை பெற்றது கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.மத்தியில் ஆட்சியில் இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இவ்வாறு அதிக இடங்களை பெற்றதா? என்றும் சந்திக்கபடுகிறது.
எந்த அதிகாரத்தை பயன்படுத்தி அதிக சீட்டுகளை வாங்கினாலும் தமிழக மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என பாஜக நிர்வாகிகளுக்கு இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் புரிய வைத்திருக்கும் என்று அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தொண்டர்கள் விமர்சித்து வருகின்றனர்.