பெட்ரோல் டீசல் மீதான வரி குறைக்கப்படாததற்கு எதிர்ப்பு! பாஜக சார்பாக கோட்டையை நோக்கி இன்று பேரணி!

Photo of author

By Sakthi

கடந்த 21ம் தேதி மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்தது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் மீதான கலால் வரி 7 ரூபாயும். குறைக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 102.63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதோடு டீசலின் விலை 94.24 காசுக்களுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதேபோன்று மாநில அரசுகளும் தங்களுடைய வரிகளை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஒரு வருடத்திற்கு முன்பாகவே தமிழக அரசின் சார்பாக குறைக்கப்பட்டுவிட்டது.

ஆகவே இனி விலை குறைப்பிற்கு எந்தவிதமான அவசியமுமில்லை. ஆகவே மத்திய அரசு சார்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இன்னும் சற்றே குறைத்து விலையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழக பாஜக மையம் சார்பாக தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதற்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதனை தமிழக அரசு கண்டு கொள்ளாததால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதற்கு சுமார் ஒரு வார கால அவகாசம் பாஜகவின் சார்பாக வழங்கப்பட்டது.

அப்படி இந்த ஒரு வார காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்கவில்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைமை அறிவித்திருந்தது.

அதனடிப்படையில், தமிழகத்தில் மாநில அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜகவின் சார்பாக இன்று பேரணி நடத்தப்படும் என்று மாநில பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில், பாஜக சார்பாக இன்று காலை 10 மணியளவில் அண்ணாமலையின் தலைமையில் பேரணி நடத்தப்படுகிறது. ராஜரத்தினம் மைதானத்திலிருந்து பேரணி தொடங்கவிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.