TVK BJP: தமிழக அரசியலில் புதிய அலையாக உருவெடுத்துள்ளது தான் தமிழக வெற்றிக் கழகம். கட்சி ஆரம்பித்த போது இருந்த ஆதரவும், ஆர்ப்பரிப்பும் தற்போது வரை குறையவில்லை என்றே சொல்லலாம். இதனை கண்ட தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. அதற்கான பேச்சு வார்த்தையும் அனைத்து தரப்பிலிருந்தும் நடைபெற்று வருகிறது.
கரூரில் நடந்த சம்பவத்திலிருந்தே இன்னும் வெளியே வராத விஜய் தற்போது கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை ஒத்தி வைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விஜய்யின் குரலாக ஒழித்து வருவது பாஜகவும், அதிமுகவும் தான். ஆனால் விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறியதால் அவர்களுடன் கூட்டணி வைக்க யோசிக்கிறார். ஆனால் பாஜகவோ அவரை விடாமல் துரத்தி வருகிறது.
தற்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் பாஜக- விஜய் கூட்டணி குறித்து கேட்ட போது அதை பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டுமென்று கூறினார். மேலும், விஜய் கூட்டணிக்கு வந்தால் சேர்த்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு, பார்க்கலாம் என்று பதிலளித்துள்ளார். பாஜக விஜய் கூட்டணிக்கு காத்திருக்கிறது என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வரும் சமயத்தில், நயினாரின் இந்த பதில் அதனை உறுதி செய்துள்ளது. ஆனால் விஜய் தரப்பு இது குறித்து எந்த பதிலும் அளிக்காததால், விஜய் என்ன சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.

