ADMK BJP: அடுத்த வருடம் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதோடு கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடும் கூட்டணி கட்சிகளிடம் கலந்துரையாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்தே தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாஜக இந்த முறை பீகாரில் பெற்ற வெற்றியை மையப்படுத்தி தமிழ்நாட்டில் நுழைந்து விட வேண்டுமென கடுமையான முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. அதில் ஒன்று அதிமுக உடனான கூட்டணி.
இரண்டு கட்சிகளுக்கு இடையேயும் சில முரண்பாடுகள் இருந்தாலும் தேர்தலை கணக்கில் கொண்டு கூட்டணி அமைத்துள்ளது. ஒரு வேலை இவர்களின் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால் யார் ஆட்சி அமைப்பது என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இபிஎஸ் மற்றும் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும், ஆட்சியில் பங்கு என்ற மரபே தமிழகத்தில் கிடையாது. அதிமுக வெற்றி பெற்றால் அதற்கு இபிஸ் தான் தலைமை தாங்குவார்.
ஆட்சி அதிகாரம் முழுவதும் அவரிடத்தில் தான் இருக்கும் என்று தெளிவாக கூறி வந்தனர். ஆனால் பாஜகவை சேர்ந்தவர்களோ, கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்பதை மறைமுகமாக கூறி வந்தனர். இதனை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், பாஜக தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்பதை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் தலை நிமிர, தமிழனின் எழுச்சிப் பயணம் என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நயினார், தேனி பங்களாமேடு திடலில் பேசும் போது, வரும் தேர்தலில் NDA கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து வெற்றி பெரும் வரை தான் அதிமுக கூட்டணி, பிறகு தமிழகத்தில் பாஜக தான் ஆட்சியில் இடம் பெறும் என்பதை தெளிவாக எடுத்து காட்டியிருக்கிறது.

