திருமாவளவனை சுற்றி வளைக்கும் பாஜக! தப்பிப்பாரா திருமாவளவன்?

0
198

சமீபகாலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடுமையாக மத்திய அரசை விமர்சனம் செய்து வருகிறார். பாஜகவின் கொள்கையை மிக கடுமையாக எதிர்க்கும் அவர் பாஜகவின் வால் ஒட்ட நறுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த கருத்து பாஜகவினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்திருக்கிறது அந்த கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தன்னுடைய வலைதளப்பதிவில் இதற்கு கடுமையான கண்டனங்களை பதிவுசெய்தார்.

ஆகவே பாஜகவினர் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்.

அதோடு திருமாவளவனுக்கு எதிராகவும், பாஜகவிற்கு ஆதரவாகவும் செயல்படும் தலித் சமுதாய அமைப்புகளையும் கட்சிகளையும் ஒன்றிணைத்து புதிய கட்டமைப்பு ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான முயற்சியில் இந்திய குடியரசுக்கட்சி தலைவரும் முன்னாள் சட்டசபை உறுப்பினருமான செ.கு.தமிழரசன் ஈடுப்பட்டுள்ளார். முதல் கட்டமாக அவர் சமீபத்தில் சமூக சமத்துவப்படைக்கட்சி தலைவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சிவகாமியை சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் பிரிந்துக்கிடக்கும் தலித் சமுதாய அமைப்புகள் ,அம்பேத்கர் மக்கள் இயக்கங்கள், தலித் சமுதாய கட்சிகளின் தலைவர்களை அழைத்துப்பேசி புதிய கூட்டமைப்பை ஏற்ப்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளன.

Previous articleரயில் பயணிகளின் கவனத்திற்கு! இனி வாட்ஸ் அப் மூலம் தான் டிக்கெட் பெற முடியும்?
Next articleஇங்கு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்! இந்த மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை!