ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்காததற்கு காரணம் இதுதானா! பாஜக போட்ட ராஜதந்திர திட்டம்!

Photo of author

By Sakthi

ரஜினிகாந்தை வைத்து தமிழகத்தில் அரசியல் கணக்கை போட்டு அதன் மூலமாக காய் நகர்த்தி வந்த பாஜகவிற்கு திடீரென்று அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று தெரிவித்த அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் நடிகர் ரஜினிகாந்த். இதனால் இனிமேல் தமிழகத்தில் அரசியல் நிலவரத்தை பொருத்தவரையில் பாஜக என்ன செய்யப்போகிறது என்பதுதான் பலரின் யோசனையாக இருந்துவந்தது.

ஆனாலும் பாஜகவின் திட்டம் வேறுமாதிரியாக இருக்கின்றது என்று தெரிவிக்கிறார்கள். ரஜினியை அரசியல் கட்சி தொடங்குவதற்கு கட்டளையிட்டதும் பாஜகதான், இப்பொழுது அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்க மாட்டேன் என்று தெரிவித்து இருப்பதற்கும் காரணம் பாஜகதான் என்று பரவலாக ஒரு தகவல் உலா வருகின்றது.

அரசியல் கட்சியை ரஜினிகாந்த் ஆரம்பிக்கின்றேன் என்று தெரிவித்து வந்த நிலையில், நேற்றைய தினம் திடீரென்று நான் இனி அரசியல் கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமாட்டேன் என்று தெரிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

இதனால் திமுக மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளானது. ஏனென்றால் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் திமுகவின் அதிருப்தி வாக்காளர்கள் மற்றும் ஆளும் கட்சியை விரும்பாதவர்கள் என்று பொதுவான வாக்காளர்கள் அனைவரும் ரஜினியை ஆதரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் அதோடு திமுகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் ரஜினிகாந்த் பக்கம் செல்ல தயாராக இருந்தார்கள். ஆகவே திமுக தலைமை ரஜினியை பார்த்து அஞ்சி போய் தான் கிடந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

அதேசமயம், திமுகவை வேரறுக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் இலக்காக இருந்து வந்தது. அப்படி இருக்கையில், ரஜினி கட்சி தொடங்கினால் நிச்சயமாக திமுகவை ஓரம் கட்ட முடியும் என்ற நிலையில், எதற்காக அவர் திடீரென்று இந்த முடிவை அறிவித்தார் என்று கேள்வி எழுப்புகின்றன அரசியல் விமர்சகர்கள் .

போதாகுறைக்கு காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அவர்களும் இன்றைய தினம் தன்னுடைய அரசியல் ஓய்வை அறிவித்து விட்டார். சரி அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று ரஜினிகாந்த் சொன்னதற்கும், தமிழருவி மணியன் அரசியலிலிருந்து விலகி நிற்பதற்கும் என்ன தொடர்பு என்று பார்ப்போம் வாருங்கள்.

கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது தேசிய ஜனநாயகக் கூட்டணியை கட்டமைத்தத்தில் இந்த தமிழருவி மணியனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். அதன் பிறகு அந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழருவி மணியன் சூத்திரதாரியாக இருந்து உருவாக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அந்தக் கூட்டணி உருவாவதற்கு சூத்திரதாரியாக இருந்தது தமிழருவி மணியன் தான் என்பது பலர் அறியாத ரகசியமாக இருக்கின்றது.

ஆரம்பத்திலிருந்தே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்று மக்களை பதற்றத்திலேயே வைத்திருந்தார். அதோடு அவர் அரசியலுக்கு வந்தால் பாஜக பக்கம் தான் செல்வார் என்று பலரும் தெரிவித்து வந்தார்கள். இந்த நிலையில், திடீரென்று தான் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார் ரஜினிகாந்த் இதற்குப் பின்னால் பாஜகவின் தூண்டுகோல் இருப்பதாக பலர் சந்தேகித்தனர்.

அந்த சந்தேகத்திற்கு உயிர் அளிக்கும் வகையில் பாஜகவின் முக்கிய பொறுப்பிலிருந்த அர்ஜுன மூர்த்தியை தன் பக்கம் இழுத்துக் கொண்டார் ரஜினிகாந்த். ஆனால் இதற்கு பாஜக தரப்பில் இருந்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம் 2014ஆம் ஆண்டு உருவான தேசிய ஜனநாயக கூட்டணியின் சூத்திரதாரியாக இருந்த தமிழருவி மணியன் அவர்களும் ரஜினிகாந்துடன் இணைந்து கொண்டார்.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று அறிவித்த உடனேயே தமிழருவி மணியன் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.

சரி இதில் பாஜகவின் திட்டம் என்ன என்பதை பார்ப்போம் 2014ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் சூத்திரதாரியாக இருந்தவர் தமிழருவிமணியன். அதேநேரம் தமிழகத்தில் அனைத்து தரப்பினருக்கும் பரிச்சயமானவர் நடிகர் ரஜினிகாந்த் இந்த இரு சக்திகளையும் ஒன்று திரட்டி பாஜக ஒரு புதிய திட்டமிடலை தீட்டி இருக்கின்றது என்று தெரிவிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணைவார் என்று சொல்லப்படுகின்றது. அப்படி இணைந்துவிட்டால் தமிழகத்தில் நிச்சயமாக பாஜக ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

அதேநேரம் தமிழருவி மணியன் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேராமல் தமிழகத்தைப் பொருத்தவரையில், பாஜகவிற்கு ஒரு அரசியல் ஆலோசகராக செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பரவலாக பேசப்படுகின்றது.

2014ஆம் ஆண்டு உருவான தேசிய ஜனநாயக கூட்டணியின் சூத்திரதாரியாக இருந்தவர் தமிழருவி மணியன். அந்த கூட்டணி அமைத்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதை பாஜக மறந்துவிடவில்லை.

ஆகவே தமிழகத்தில் பாஜகவை வலுவாக கட்டமைக்கும் பணியை தமிழருவி மணியன் இடம் பாஜக ஒப்படைக்கப் போவதாக சொல்லப்படுகின்றது. இப்படி இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது பாஜக.

பாஜகவின் இந்த திட்டமானது, தமிழகத்தில் நிறைவேறுமானால் , தமிழ்நாட்டில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.