ADMK BJP: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே இருக்கும் நிலையில் அதிமுகவில் மட்டும் உட்கட்சி பிரச்சனையும், கூட்டணி கணக்குகளும் இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளன. ஒரு வருடத்திற்கு முன்பே பாஜக உடன் கூட்டணி அமைத்த அதிமுகவால் அக்கட்சிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தகவல் கசிந்தது. மேலும் இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறி தினகரன் NDA கூட்டணியிலிருந்து விலகினார். நயினாரின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்று கூறி ஒபிஸ்யும் விலகினார். இவ்வாறு அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைத்ததிலிருந்தே NDA கூட்டணி பலமிழந்து காணப்பட்டது.
அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையையும், பாஜக கூட்டணியை வலுப்படுவதும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு நினைத்த அளவு வெற்றியை தேடி தரும். இவ்வாறான நிலையில் தான் எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ் டிசம்பர் 15 க்குள் அதிமுக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இபிஎஸ்யை எச்சரித்திருந்தார். இதனை தொடர்ந்து டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ் தனது கெடுவை டிசம்பர் 24 ஆம் தேதி மாற்றியமைத்தார்.
இவ்வாறு ஓபிஎஸ்யின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதங்கள் எழுந்த நிலையில் இன்று தமிழக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் சென்னை வருகை தந்துள்ளார். ஓபிஎஸ் தனது முடிவை நாளை அறிவிக்க போகும் நிலையில், இன்று இவர் வருகை தந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இன்று இபிஎஸ்யை சந்தித்து பாஜகவிற்கான தொகுதி பங்கீடு மற்றும் ஓபிஎஸ்யை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது பற்றி பியூஷ் கோயல் விவாதிப்பார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் இன்று இபிஎஸ் எடுக்க போகும் முடிவுவை பொறுத்து தான், நாளை ஓபிஎஸ் அவரது முடிவை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.