குக்கர் கொண்டு வெடிப்பு! மரணத்தின் விளிம்பில் குற்றவாளி! வாக்குமூலம் வாங்க முடியாமல் தவிக்கும் காவல்துறையினர்!

குக்கர் வெடிகுண்டை மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கின்ற பகுதிகளில் வெடிக்க வைத்து அதனை ஹிந்து பயங்கரவாதமாக காட்ட ஷாரிக் முயற்சி செய்திருக்கிறார். இதற்காகத்தான் தன்னை ஹிந்துவாக அடையாளப்படுத்தி வந்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் குண்டு வெடித்த நாளில் அவர் காவி உடை அணிந்து இருந்ததாக சொல்லப்படுகிறது. இடுப்பிலும் காவிதுண்டு கட்டி இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு நடுவில் 45 சதவீத தீக்காயத்துடன் காங்கானாடியில் இருக்கின்ற பாதர் முல்லர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவரால் பேச முடியவில்லை, ஒரு கண் தெரியவில்லை மற்றொரு கண்ணை திறக்கவும் முடியவில்லை.

கை கறிக்கு போனதால் அவரிடமிருந்து காவல்துறையினரால் வாக்கு மூலமும் பெற முடியவில்லை. கை, உடலில் தீக்காயம் இருப்பதால் எந்த நேரத்திலும் உடல்நிலை மேலும் மோசமடையலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

அவர் எந்தவிதமான பயங்கரவாத செயல்களை செய்து வந்தார்? அவருடைய அடுத்த திட்டம் என்ன? அவருடன் இருப்பவர்கள் யார்? அவருக்கு யாரெல்லாம் அடைக்கலம் வழங்கினார்கள்? எந்தெந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு அவருக்கு இருந்தது? என்பது தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால், எப்படியாவது அவரை காப்பாற்றுங்கள் என்று மருத்துவர்களிடம் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளார்கள்.

சாரிக்கிற்கு 8 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றன. தற்போதைய நிலையில், அவர் குணமாக 25 நாட்களுக்கு மேல் ஆகலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள் ஆட்டோ ஓட்டுனர் புருஷோத்தம் உடல்நலம் தேறி வருகிறார்.