மது பானம் குடித்த நபருக்கு வந்த ரத்தம்! டாஸ்மாக்கில் ஏற்பட்ட பரபரப்பு!
டாஸ்மாக் மதுபானக் கடையில் மது வாங்கிக் குடித்த ஒரு நபருக்கு மூக்கில் திடீரென ரத்தம் வந்ததால் சக மது அடிமைகள் பயங்கர பீதியில் உறைந்து போயினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, விருகாவூர் என்ற கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவரின் மகன் செந்தில் இன்று மதிய நேரத்தில் ரூ.150 மதிப்புள்ள மதுபானம் ஒன்றை வாங்கி குடித்துள்ளார்.
அந்த நபர் மது குடித்த உடனே அவரது மூக்கில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்துள்ளது. இதைக் கண்ட செந்தில் அதிர்ச்சி அடைந்து அச்சத்தில் இருந்துள்ளார். எனவே சக குடிகாரர்களும், தங்கள் மது பாட்டிலை மேலும் கீழுமாக பரிசோதித்து பார்த்துள்ளனர். அப்போது ஒருவரிடம் இருந்த மதுபான பாட்டிலில் குப்பைகள் மற்றும் பூச்சி இருந்ததாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றன. இதனால் பயந்துபோன செந்தில், சேல்ஸ்மேன் இடம் இதுபற்றி கேட்டுள்ளார்.
அதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வரஞ்சரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் மோதல் ஏதும் ஏற்படாமல் இருக்க அந்த கடையை மூடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுதப்பட்டனர். மூக்கில் ரத்தம் வரப்பட்ட செந்தில் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சரக்கு அடிக்கும் போது மூக்கிலிருந்து இரத்தம் வந்தது ஏன் என்பது மர்மமாகவே இருக்கிறது. இது தொடர்பாக செந்திலை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சேலத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கான நேர கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.
சேலம் மாநகர எல்லைக்குள் செய்யப்படும் அனைத்து ஷாப்பிங் மால்கள், ஜவுளி கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகியவை அனைத்தும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படவும் அனுமதி தரப்பட்டுள்ளது. முன்னதாக இந்த டாஸ்மாக் கடைகள் எல்லாம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில், தற்போது கட்டுப்பாடுகளை தொடங்கியதால், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகள், சில்லரை விற்பனை கடைகள் இவை அனைத்தும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என சேலம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.