ரூட்ட மாத்துங்க. இல்லனா விபூதி அடிப்பாங்க!.. சூர்யாவை பொளக்கும் புளூசட்ட மாறன்..

Photo of author

By அசோக்

ரூட்ட மாத்துங்க. இல்லனா விபூதி அடிப்பாங்க!.. சூர்யாவை பொளக்கும் புளூசட்ட மாறன்..

அசோக்

surya

நடிகர் சூர்யாவின் படம் தியேட்டரில் வெளியாகி ஹிட் அடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. சிங்கம் 2-வுக்கு பின் பெரிய ஹிட் படம் சூர்யாவுக்கு அமையவில்லை. ஜெய்பீம், சூரரைப்போற்று படங்கள் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அந்த படங்கள் தியேட்டரில் வெளியாகவில்லை. சமீபத்தில் வெளியான ரெட்ரோ படம் சூப்பர் ஹிட் படமா என்பது விரைவில் தெரிந்துவிடும். இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் தனது எக்ஸ் தளத்தில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

6 வருடங்களாக தொடர் தோல்விகளை தந்து வரும் சூர்யா.  அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியாக சூர்யா தந்த கடைசி தியேட்டரிக்கல் ஹிட் படம் சிங்கம் (2009).

அதன்பிறகு இன்றுவரை சரியான கதையை தேர்வு செய்ய தெரியாமல் தோற்று வருகிறார். இதற்கு முக்கிய காரணம் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தராமல் இருப்பதே.  ஏற்கனவே ஜெயித்த இயக்குனர்கள் மீது சவாரி செய்தால் வெற்றி உறுதி என நம்புகிறார். ஆனால் அவர்கள் சொல்லி வைத்தாற்போல் இவருக்கு மட்டும் விபூதி அடித்து விடுகிறார்கள்.

ஜிகர்தண்டா Double X எனும் ஓடாத படத்திற்கு சக்ஸஸ் மீட் கொண்டாடி ஏமாற்றினார்கள். அதை நம்பி கார்த்திக் சுப்பராஜூக்கு வாய்ப்பு தந்தார். விளைவு… ரெட்ரோ பணால் ஆகிவிட்டது. சிங்கத்திற்கு பிறகு ஒரே ஒரு தியேட்டரிக்கல் ஹிட் கூட தரமுடியாமல் 16 வருட ஃப்ளாப் பயணம் தொடர்கிறது.

அடுத்து ஆர்.ஜே.பாலாஜியின் மாசானி அம்மன் கதை இவருக்கு கைகொடுக்குமா என தெரியவில்லை. தமிழ் ரசிகர்கள் உஷாராக இருப்பதை மிகத்தாமதமாக உணர்ந்த சூர்யா அடுத்ததாக.. வெங்கடேஷ் அட்லூரி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்‌. அது என்ன ஆகுமோ!. இனியாவது உருப்படியான கதைகளை தேர்வு செய்ய வேண்டும். புதிய இயக்குனர்களை நம்ப வேண்டும்.

பழைய டபரா செட்டுகளை மட்டுமே நம்பினால்.. விபூதி அடித்துக்கொண்டுதான் இருப்பார்கள். திரையில் இவரை பார்க்கும்போது கதாபாத்திரமா தெரியாமல்.. சூர்யாவாக மட்டுமே தெரிவது பெரிய மைனஸ். இந்த செயற்கை தனத்தையும் சரி செய்ய வேண்டும். பிதாமகன், காக்க காக்க போன்று நம்பகத்தன்மை கொண்ட மாறுபட்ட கேரக்டர்களை தேர்வு செய்ய வேண்டும்.