மக்கள் பணத்தை கொள்ளையடித்த 3 நடிகர்கள்!. போட்டு பொளக்கும் புளூசட்ட மாறன்!..

Photo of author

By அசோக்

மக்கள் பணத்தை கொள்ளையடித்த 3 நடிகர்கள்!. போட்டு பொளக்கும் புளூசட்ட மாறன்!..

அசோக்

vijay sethupathi

கோலிவுட்டில் சில நடிகர்கள் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து கொண்டே இருப்பார்கள். ஆனால், அதில் எல்லா படங்களும் வெற்றிப்படங்களாக அமையாது. ஜிவி பிரகாஷ், விஜய் சேதுபதி இந்த வரிசையில் வருகிறார்கள். இவர்கள் நடித்து தோற்றுப்போன படங்களால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஆகியிருக்கிறது. ஆனால், அதைபற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவது இல்லை.

இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் தனது எக்ஸ் தளத்தில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

குறைந்த காலத்தில் அசுரவேகத்தில் பலகோடி சம்பாதித்து விடவேண்டும் என்பதால் கதையை பற்றி கவலைப்படாமல்.. உடனே கால்ஷீட் தந்து கொசகொசவென்று நடித்து தள்ளியவர்கள் சசிகுமார், விஜய சேதுபதி மற்றும் ஜி.வி.பிரகாஷ்‌. கடனை அடைக்க….‌ஓடாது என தெரிந்தும் மொக்கை படத்தில் நடித்தேன் என சசிகுமார் பேட்டி தந்துள்ளார்

Divya Bharti posted that GV Prakash and Chaindavi did not agree to the divorce

அதேபோலத்தான் விஜய‌சேதுபதியும்.‌காட்டு மொக்கை படங்களில் ஹீரோவாக நடித்து தொடர் தோல்விகளை தந்தார். இது ஜி.வி. பிரகாஷ்க்கும் பொருந்தும். குறுகிய காலத்தில் பெருமறவு சம்பாதிக்க பல குப்பை படங்களில் நடித்து மக்களின் பணத்தை மொட்டை அடித்துள்ளார்கள் இந்த வெள்ளிக்கிழமை ராமசாமிகள்.

இவர்களால் பலகோடிகள் நஷ்டப்பட்ட தயாரிப்பாளர்கள் நிலைமை கொடுமை. இனியும் இவர்களிடம் ஏமாறாமல் மக்களும், தயாரிப்பாளர்களும் உஷாரான பிறகுதான்.. சமீபகாலமாக வேறுவழியின்றி நிதானமாக நடித்து வருகிறார்கள்.

மகாராஜா பெரிய ஹிட் என்பது அனைவரும் அறிந்தது. அயோத்தி விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. ஆனால் வசூலில் பெரிதாய் தேறவில்லை. தற்போது டூரிஸ்ட் ஃபேமிலிக்கு நல்ல‌ ஓப்பனிங்‌ முழு ரிசல்ட் சில தினங்களில் தெரியும்’ என பதிவிட்டிருக்கிறார்.