10 நாட்களுக்குப் பிறகு கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு! போலீசார் குவிப்பு!

0
132

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சார்ந்தவர் ராமலிங்கம் இவருடைய மகள் ஸ்ரீமதி 17 வயது மதிக்கத்தக்க இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் இருக்கின்ற சக்தி தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இதற்கு நடுவே கடந்த 13ஆம் தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார் பள்ளியின் நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் இதனை அவருடைய பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்து போராட்டத்தை தொடங்கினார்கள்.

இதில் கடந்த 17ஆம் தேதி பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள் நடத்திய போராட்டம் மிகப்பெரிய கலவரத்தில் முடிவடைந்தது. மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கு நடுவில் மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்து அவருடைய உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்து வந்தார்கள். இதன் காரணமாக, கடந்த 10 நாட்களாக ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் மாணவியின் மரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்து நேற்று நடைபெற்ற விசாரணையின் போது மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக் கொள்ள அவருடைய பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

இந்த சூழ்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கின்ற சிவதியின் உடலை அவருடைய பெற்றோர் இன்று பெற்றுக் கொண்டனர். இன்று காலை 6 . 50 மணியளவில் மாணவி ஸ்ரீமதியின் உடலை அவருடைய பெற்றோர் பெற்றுக் கொண்டனர். ஸ்ரீமதியின் தாயார் கையெழுத்திட்டு தன்னுடைய மகளின் உடலை பெற்றுக் கொண்டார்.

மாணவி ஸ்ரீமதியின் உடல் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சூழ்நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மருத்துவமனையிலிருந்து ஸ்ரீமதியின் உடல் அவருடைய சொந்த ஊரான பெரியநெசலூர் கொண்டு செல்லப்படுகிறது. முன்னதாக மருத்துவமனையில் இருந்து ஸ்ரீமதியின் உடலுக்கு அமைச்சர் கணேசன், அதிகாரிகள் உள்ளிட்ட அஞ்சலி செலுத்தினர்.

Previous articleசிபிஎஸ்இ பொதுத் தேர்வின்  2022-23 கல்வியாண்டிற்கான தேர்வு தேதி! தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை!
Next articleவிவசாயிகளுக்கு  ஒரு ஹாப்பி நியூஸ்…முதலமைச்சர் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது!!