தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகர்! தமிழில் பேட்ட படத்தில் நடித்துள்ளாரா!!

Photo of author

By Sakthi

தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகர்! தமிழில் பேட்ட படத்தில் நடித்துள்ளாரா!
பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் நவாசுதீன் சித்திக் அவர்கள் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். நடிகர் நவாசுதீன் சித்திக் அவர்கள் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் சிங்காரம் என்ற பெயரில் சிறப்பாக நடித்திருந்தார்.
பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் நவாசுதீன் சித்திக் அவர்கள் குணச்சித்தர வேடம் மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடிப்பதற்கு புகழ் பெற்றவர். இவர் தமிழில் பேட்ட படத்தில் நடித்ததற்கு பிறகு மீண்டும் பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த நவாசுதீன் சித்திக் அவர்கள் தற்போது தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் 75வது திரைப்படத்தில் நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்கவுள்ளார். நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் 75வது படத்திற்கு சைந்தவ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சைந்தவ் திரைப்படத்தை இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்குகிறார். சைந்தவ் திரைப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை ருஹானி ஷர்மாவும், நடிகை ஆண்ட்ரியாவும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சைந்தவ் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். நிஹாரிகா எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் வெங்கட் போயனப்பள்ளி தயாரிக்கின்றார். இந்த திரைப்படத்திற்கு மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.
சைந்தவ் திரைப்படம் ஆக்சன் கமெர்சியல் படமாக உருவாகின்றது. சைந்தவ் திரைப்படத்தில் நடிகர் நவாசுதீன் சித்திக் அவர்கள் விகாஸ் மாலிக் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் நவாசுதீன் சித்திக் அவர்களின் பிறந்தநாளான மே 19ம் தேதி அவரது பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.