பாலிவுட் நடிகை சன்னி லியோனின் நடன நிகழ்ச்சி! அனுமதி மறுத்த கேரள துணைவேந்தர்! 

Photo of author

By Sakthi

பாலிவுட் நடிகை சன்னி லியோனின் நடன நிகழ்ச்சி! அனுமதி மறுத்த கேரள துணைவேந்தர்!
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் அவர்களின் நடன நிகழ்ச்சியை நடத்த கேரள பல்கலைக் கழக துணைவேந்தர் மோகனன் குன்னும்மாள் அவர்கள் அனுமதி மறுத்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் குசாட் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பல பேர் கலந்து கொண்டனர்.
பலர் கலந்து கொண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து இது போன்ற நிகழ்ச்சிகள் இனிமேல் நடத்தக் கூடாது என்று அரசு தடை பிறப்பித்து இருந்தது.
இதையடுத்து கேரளாவின் தலைநகர் என்று அழைக்கப்படும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் அவர்கள் நடன நிகழ்ச்சி நடைபெறவிருப்பதாகவும் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேரளா பல்கலைக் கழக துணைவேந்தர் அவர்களிடம் அனுமதி கேட்கப்பட்டது.
ஆனால் கேரள பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் மோகனன் குன்னும்மாள் அவர்கள் சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துள்ளார். கேரள அரசு ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவின் பேரில் துணைவேந்தர் டாக்டர் மோகனன் குன்னும்மாள் அவர்கள் நடன நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் அவர்கள் இந்தி, தமிழ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் கடந்த 2022ம் ஆண்டு தமிழில் வெளியான ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிந்திருந்தார். இந்நிலையில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் அவர்களின் நடன நிகழ்ச்சி ஜூலை 5ம் தேதி நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்கது.