மருத்துவமனை அருகே வெடிகுண்டு தாக்குதல்! பிரபல நாட்டில் பயங்கர பரபரப்பு!

Photo of author

By Hasini

மருத்துவமனை அருகே வெடிகுண்டு தாக்குதல்! பிரபல நாட்டில் பயங்கர பரபரப்பு!

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அதனைத் தொடர்ந்து அங்கு தலிபான்கள் பல மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கின்றனர். பெண்களுக்கு கல்வி எதற்கு? என்று கேட்டனர். பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்றும் கூறினனார்கள்.

அதேபோல தவறு புரிபவர்களுக்கு பல கடுமையான தண்டனைகளை பொது இடத்திலேயே நிறைவேற்றி வருகின்றனர். எனவே மக்கள் பலருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அவர்கள் ஆட்சியை மேற்கொள்கிறார்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இன்று அங்கு மருத்துவமனை அருகிலேயே வெடிகுண்டு தாக்குதல் ஒன்று நடந்தேறி உள்ளது.

மேலும் அங்கு தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபிறகு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, அவ்வப்போது பல தாக்குதல்களை செய்து கொண்டே உள்ளது. மேலும் சில கிளர்ச்சியாளர்கள், மற்றும் பல குழுக்களும் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அந்நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனை அருகிலேயே இன்று மதியம் 2 மணி அளவில் அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த வெடி குண்டுகள் வெடித்துள்ளன.

அந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சூடும் நடைபெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதை தொடர்ந்து படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதன் காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த இரட்டை குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஹரோஷன் பிரிவினர் நடத்தி இருக்கலாம் என்ற தகவல்களும் சந்தேகத்திற்கு இடமாக வந்துள்ளது.