ஆப்கானிஸ்தான்! காபூல் விமான நிலையம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு

Photo of author

By Sakthi

ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி இருக்கின்ற சூழ்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணமாக, அந்த நாட்டு பொதுமக்கள் மற்ற நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புக முயற்சி செய்து வருகிறார்கள்.

அதேநேரம் ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றி இருப்பதற்கு பல நாடுகளும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. இந்த குண்டு வெடிப்பில் உயிர் சேதம் மற்றும் பாதிப்பு தொடர்பாக எந்தவிதமான தகவலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. அமெரிக்க பொது விவகாரத்துறை, பாதுகாப்புத்துறை செயலாளர் ஜான் வலைதளம் மூலமாக இந்த தகவலை தெரிவித்து இருக்கின்றார்.