பூஸ்டர் டோஸ் போட்டிங்களா? சீக்கிரமா போய் போட்டுக்கங்க 600 இடங்களில் இன்று நடக்கும் சிறப்பு முகாம்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் துறை சார்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த விதத்தில் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு நோய்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் இருக்கின்ற முன் களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணைய நோய் இருப்பவர்களுக்கு கடந்த 10ஆம் தேதி முதல் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி என்று சொல்லப்படும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தும் பணியை முதல்வர் ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார்.

அதோடு சென்னை பெருநகர மாநகராட்சி சார்பாக 60 வயதிற்கு மேற்பட்ட இணைய நோய் இருப்பவர்கள் தொலைபேசி மூலமாக முன்பதிவு செய்தால் அவர்களுடைய வீடுகளுக்கே சென்று தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி தற்சமயம் அந்த பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக 20,83000க்கும் அதிகமானவர்கள் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டு இருக்கிறது. அதில் எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள் 10,00000க்கும் மேற்பட்டவர்கள் இந்த தடுப்பூசி போடுவதற்காக திட்டம் தீட்டப்படுகிறது.

அந்த விதத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணைய நோய் இருப்பவர்களுக்கு மிக விரைவாக பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று பூஸ்டர் டோஸ் போடுவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று சிறப்பு முகாமுக்கு தேவைப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன, அனைத்து மாவட்டங்களில் இருக்கின்ற பொது சுகாதாரத்துறை இணை மற்றும் துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் மருத்துவர் செல்வவிநாயகம் உத்தரவிட்டார்.

இந்த சூழ்நிலையில், வியாழக்கிழமையான இன்றைய தினம் சென்னையில் 160 இடங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 600 பகுதிகளில் பூஸ்டர் டோஸ் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது.