அரசியலில் கால் பதிக்க பூட் ரிவ்யூ வா?? இர்ஃபானின் திருமண அழைப்பிதழுக்கு நெட்டிசன்கள் விமர்சனம்!!

0
210
Boot review to get a foothold in politics?? Netizens review Irrfan's wedding invitation!!
Boot review to get a foothold in politics?? Netizens review Irrfan's wedding invitation!!

அரசியலில் கால் பதிக்க பூட் ரிவ்யூ வா?? இர்ஃபானின் திருமண அழைப்பிதழுக்கு நெட்டிசன்கள் விமர்சனம்!!

இந்த கொரோனா காலக்கட்டத்தில் யூடியூப் தளமானது பலருக்கும் வளர்ச்சியை கொடுத்துள்ள நிலையில் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி பிரபலமானவர்கள் ஏராளம். அப்படி பிரபலமானவர்களில் ஒருவர்தான் இர்ஃபான்.இவர் முதலில் தனியார் ஊடகத்தில் வேலை செய்து கொண்டே,மறுபுறம் உணவு சாப்பிட்டு விமர்சனம் செய்வதை ஓர் பொழுதுபோக்காக செய்து வந்தார்.

ஆனால் நாளடைவில் அவருக்கு இதுவே பெரும் ஆதரவு அளிக்க தொடங்கியது. அந்த வகையில் உணவு விமர்சனம் செய்வதால் யூடியூப் தளத்தில் இவருக்கென்று ரசிகர் பட்டாளம் உருவாகி சப்ஸ்கிரைபர்சும் உயர்ந்து கொண்டே போனது. தற்பொழுது புதிய படம் ஏதேனும் வெளிவந்தால் இவரிடம் ப்ரோமோஷனுக்காக வந்து நிற்கும் அளவிற்கு இவர் தற்பொழுது வளர்ந்து நிற்கிறார்.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நிச்சயம் ஆகி சில கருத்து வேறுபாடு காரணமாக நின்று போனது. அவ்வாறு இவருடைய திருமணம் நின்று போனது குறித்து யூடியூப் தளத்தில் பெரும் பேசும் பொருளாகவே மாறியது. ஆனால் இர்ஃபான் அதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் அடுத்தடுத்து கட்டத்திற்கு முன்னேறி செல்வதற்கான வேலையை மட்டுமே செய்து வந்தார்.

அந்த வகையில் கனிமொழி, ஆளுநர் என தொடங்கி கமல்ஹாசன் வரை அனைவருடன் சேர்ந்து ஃபுட் ரிவ்யூ செய்ய தொடங்கினார்.தற்பொழுது இவருக்கு மீண்டும் திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பிரபலங்கள் பலருக்கும் தனது திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறார். அத்தோடு அந்த வீடியோவையும் தனது யூடியூப் தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவருடைய திருமணம் குறித்த முதல் அறிவிப்பை ஆர்.ஜே பாலாஜியுடன் உண்டான ஓர் இன்டர்வியூவில் வெளிப்படையாக கூறினார். தற்பொழுது பிரபலங்களுக்கு பத்திரிக்கை வைத்து வருவதை பலரும் கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.

குறிப்பாக ஆளுநருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு உடனடியாக எம்பி கனிமொழி அவர்களுக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்தது குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனை வடிவேல் காமெடியுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் விமர்சனம் செய்வது தற்பொழுது வைரலாகி வருகிறது.

Previous articleநாளை கரையை கடக்கும் மோக்கா புயல்!! தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை!!
Next articleஅபராதம் விதித்த சென்னை மாநகராட்சி!! ஒப்பந்தகாரர்கள் அதிர்ச்சி!!