ADMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக மாநில கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக செயல்படத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசியல் களம் இப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், மற்றும் மிக முக்கியமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை.
இவையனைத்தும் முக்கிய இடம் பெரும் நிலையில் விஜய் அரசியலுக்கு வந்ததிலிருந்தே அவருக்கான ஆதரவு அதிகளவில் உள்ளது. இதனால் அதிமுகவிலிருந்து வெளியேற்ற பட்ட செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்து கொண்டார். 50 ஆண்டு காலம் அதிமுகவில் பணியாற்றிய செங்கோட்டையன், புதிய கட்சியில் சேர்ந்தது பல்வேறு விவாதங்களுக்கு வழி வகுத்தது. தவெகவில் இணைந்த கையுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன் 2026 யில் விஜய் தலைமையில் ஆட்சி அமையும்.
மக்கள் புதிய மாற்றத்தை எதிர் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக, திமுக இரண்டும் ஒன்று தான் என்று கூறிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. அப்படி இருக்க 50 ஆண்டு காலம் அதிமுகவில் இருந்து விட்டு, வேறு கட்சியில் சேர்ந்த உடன் இரண்டு கட்சியும் ஒன்று தான் என கூறுவது அவர் அதிமுகவிற்கு செய்யும் துரோகம் என பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனை அதிமுக மட்டுமல்லாது, திமுகவை சேர்ந்தவர்களும் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

