15 வருடங்களுக்கு பிறகு போட்டியில் மீண்டும் களமிறங்கும் குத்துச்சண்டை வீரர்!!

Photo of author

By Pavithra

 

இரும்பு மனிதர் என தனது ரசிகர்களால் அழைக்கப்பட்ட மைக் டைசன் 15 ஆண்டுகளுக்கு பிறகு தனது 54 வயதில் மீண்டும் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டைசன் குத்துச்சண்டை களத்தையே தனது அதிரடியான பஞ்சுகளாலும் குத்துகளாலும் மிரட்டி வைத்தவர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.இவர் பூமியிலேயே ஆபத்தான மனிதர் என்றும் அழைக்கப்பட்டார்.

உலக குத்துச்சண்டை அமைப்பு (டபிள்யுபிஏ), உலக குத்துச்சண்டை கவுன்சில் (டபிள்யுபிசி), சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு (ஐபிஏ) ஆகியவற்றின் சாம்பியன் பட்டம் மூன்றையும் ஒன்றாகக் கைப்பற்றிய முதல் வீரர் மைக் டைசன் என்பதை மறக்கலாகாது.இதுமட்டுமின்றி டைசன் இதுவரை 58 சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு அதில் 50 போட்டிகளில் வென்றுள்ளார்.அதிலும் 44 போட்டிகள்நாக்-அவுட்டிலே
வெற்றிபெற்றுள்ளார்.
இதன்பின்பு கடந்த 2005ஆம் ஆண்டு தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி கலிபோர்னியாவில் உள்ள கார்ஸன் நகரியில் உள்ள டிரினிடி ஹெல்த் ஸ்போர்ட் பார்க்கிங் -யில் 8 சுற்றுகள் கொண்ட மூன்று மணி நேரம் போட்டி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டி தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் நடத்தப்பட உள்ளது.

இதில் முன்னாள் வீரரான ராய் ஜோன்ஸ் ஜூனி-க்கு போட்டியாக டைசன் களம் இறங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.முன்னாள் வீரர் ஜோன்ஸ்-க்கு 51வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக டைசன் தனது டுவிட்டர் பக்கத்தில் குத்துச்சண்டை பயிற்சி பெறுவது போன்று வீடியோவையும் வெளியிட்டு மீண்டும் வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் குத்துச்சண்டை போட்டியில் டைசன் களமிறங்க வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.