பிரம்மன் உங்கள் தலையெழுத்தை மாற்றி எழுத வேண்டுமா..?? ஒரு முறை மட்டும் இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்..!!

Photo of author

By Janani

பிரம்மன் உங்கள் தலையெழுத்தை மாற்றி எழுத வேண்டுமா..?? ஒரு முறை மட்டும் இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்..!!

Janani

Updated on:

ஒருமுறை சென்றால் நம் தலையெழுத்தையே மாற்றும் அதிசய கோவில். ஆனால் நீங்கள் இந்த கோவிலுக்கு போக வேண்டும் என்று நினைத்தால், போய்விட முடியாது. உங்களது தலையெழுத்தை மாற்ற வேண்டும் என்று சிவபெருமான் முடிவு செய்தால் மட்டுமே இந்த கோவிலுக்குள் உங்களால் காலடி எடுத்து வைக்க முடியும்.

இப்படிப்பட்ட அதிசய கோவில்தான் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில். வாழ்க்கையில் படாத பாடுபட்டு, வாழ்க்கையே வெறுத்துப் போய் இருப்பவர்கள் இந்த கோவிலுக்கு ஒரு முறை சென்று சிவபெருமானிடம் மனதார ஒரு முறை வேண்டினால், நிச்சயமாக உடனடியாக உங்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.

திருச்சி மாவட்டத்தில் திருப்பட்டூர் என்னும் ஊரில் உள்ள தலையெழுத்தையே மாற்றும் கோவில் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். பிரம்மா தங்களது வாழ்க்கையை மங்களகரமானதாக மாற்றி தர வேண்டும் என்பதற்காக மஞ்சள் காப்பு மஞ்சள் நிற வஸ்திரம் என அனைத்தையும் மஞ்சள் நிறத்தில் சாட்டி வழிபடுவார்கள். தாமரை மலர், புளியோதரை நெய்வேத்தியம் போன்றவற்றை வியாழக்கிழமை அன்று படைத்து பக்தர்கள் வழிபடுவார்கள்.

இந்தக் கோவிலுக்கு வந்து ஒரு முறை வழிபட்டு சென்றாலே அவர்களது வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்படும் என்பதை பலரும் அனுபவம் ரீதியாக கண்ட உண்மை. காக்கும் கடவுளான திருமாலுக்கும், அழிக்கும் கடவுளான சிவனுக்கும் மட்டுமே உலகம் முழுவதும் ஏராளமான கோவில்கள் உள்ளன. ஆனால் படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு ஒரு சில கோவில்களில் மட்டுமே தனி சன்னதி உள்ளது.

பெரும்பாலும் சயன கோலத்தில் இருக்கும் பெருமாள் கோவிலில், பெருமாளின் ஆதிக்க மலர்களில் தோன்றிய தாமரை மலரின் மீது அமர்ந்த நிலையில் இருக்கும் பிரம்மாவை மட்டுமே தரிசிக்க முடியும். பிரம்மாவிற்கு என தனி சன்னதி உள்ள கோவில்களுள் மிகவும் தனிச்சிறப்பானது தான் இந்த திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்.

என்னடா வாழ்க்கை இது?! நம்முடைய வாழ்க்கை மாறாதா? பிரம்மன் ஏன் நமது தலையெழுத்தை இப்படி எழுதி விட்டார்? நம்முடைய தலையெழுத்து மாறவே மாறாதா? என்று புலம்புவர்களுள் நீங்களும் ஒருவராக இருந்தால் நீங்கள் செல்ல வேண்டிய கோவில் இந்த திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் தான்.

இந்தக் கோவிலின் சிறப்பு என்றால், சிவனுக்கு இணையாக பிரம்மாவிற்கும் தனி சன்னதி அமைத்து இருப்பது தான் சிறப்பு. இந்த கோவிலுக்கு ஒரு முறை வந்து கடவுளை வணங்கி விட்டு சென்றால் தலையெழுத்து மாறும் என்பது ஐதீகம்.

இந்த உலக உயிர்களைப் படைக்கும் வேலையை சிவபெருமான் பிரம்மாவிடம் கொடுத்தார். ஆனால் தனது படைப்பு தொழிழால் ஆணவம் கொண்ட பிரம்ம தேவரின் ஐந்து தலைகளுள் ஒரு தலையை சிவபெருமான் எடுத்துவிட்டார். அத்துடன் பிரம்ம தேவரை பூமியில் பிறக்கும்படி சாபம் விட்டார் சிவபெருமான். தனது தவறை உணர்ந்து சிவனிடம் மன்னிப்பு கேட்ட பிரம்மனிடம், பூலோகத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் சாபம் நீங்கும் என்று வழிகாட்டினார் சிவபெருமான்.

இந்த தளத்திற்கு வந்து ஒரே இடத்தில் பல லிங்கங்களை பிரதிஷ்டை செய்து பிரம்மா தனது சாபத்திலிருந்து விடுபட்டார். பிரம்மனின் பக்திக்கு மனமிறங்கிய சிவபெருமான் காட்சி கொடுத்ததுடன், இந்த ஸ்தலத்திலேயே வீற்றிருந்து நாடிவரும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அவர்களின் துன்பங்களை போக்குமாறு தெரிவித்தார்.

எனவேதான் பிரம்ம தேவர் இந்த கோவிலை நாடி வரும் பக்தர்களின் துன்பங்களை நீக்கி, அவர்களது தலையெழுத்தை மாற்றி தருகிறார்.