விபத்தில் ஏற்பட்ட மூளைச்சாவு… இறந்தும் பலரை வாழ வைத்த வாலிபர்… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மரணம்…
திருவாரூர் மாவட்த்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் விபத்தில் மூளைச்சாவு அடைந்ததை அடுத்து அவருடைய உடல் உறுப்புகள் தானம் சொய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இறந்தும் பல உயிர்களை வாழவைத்த அந்த வாலிபரின் மரணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தின் தில்லைவிளாகத்தில் வசித்து வந்த இராஜேந்திரன் என்பவரின் மகன் மணிகண்டன் என்பவரின் உடல் உறுப்புகள் தான் தற்பொழுது தானமாக வழங்கப்பட்டுள்ளது. வாலிபர் மணிகண்டன் அவர்களுடைய தந்தை இராஜேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். மணிகண்டன் தனது தாய் வெற்றிச்செல்வியுடன் வசித்து குவைத்தில் வருந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பெண் பார்ப்பதற்காக மணிகண்டன் மட்டும் குவைத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இதையடுத்து கடந்த ஜூலை 21ம் தேதி மணிகண்டன் அவர்கள் தில்லைவிளாகம் பகுதியில் உள்ள அவருடைய நண்பர் வீரபத்ரன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக மணிகண்டன் அவர்கள் கீழே விழுந்துவிட்டார். கீழே விழுந்த மணிகண்டன் அவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் மணிகண்டன் அவர்கள் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் அவர்கள் மூளைச்சாவு அடைந்ததாக கடந்த 24ம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் அறிவாத்தது. இதையடுத்து மணிகண்டன் அவருடைய தாய் வெற்றிச்செல்வி அவர்களுக்கும் தகவல் தெறிவிக்கப்பட்டது. இதையடுத்து குவைத்தில் இருந்து வந்த மணிகண்டன் அவர்களுடைய தாயார் வெற்றிச்செல்வி மகன் மணிகண்டன் அவர்களுடைய உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து சென்னையிலிருந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்த சென்னை மருத்துவக் குழுவும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவக் குழுவும் இணைந்து மணிகண்டன் அவர்களுக்கு உடல் உறுப்புகளை அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. இந்த அறுவை சிகிச்சை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.
இதையடுத்து மூளைச்சாவு அடைந்த மணிகண்டன் அவர்களுடைய இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னிகள், கண்கள் ஆகியவை தானமாக வழங்கப்பட்டது. சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மணிகண்டனுடைய இதயமும், மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரா மருத்துவமனைக்கு கல்லீரலும், மதுரை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு இரண்டு கிட்னிகளும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மணிகண்டனுடயை கண்களும் தானமாக வழங்கப்பட்டது.
அகற்றப்பட்ட அனைத்து உறுப்புகளும் அதற்குரிய பாதுகாப்பு வசதியுடன் ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது. சென்னைக்கு செல்ல வேண்டிய இதயம், கல்லீரல் ஆகிய உறுப்புகள் இரண்டும் விமானம் மூலமாக கொண்டு செல்லப்பட்டது.