கடையில் திருட வந்தவனுடன் துணிச்சலாக சண்டையிட்ட பாட்டி!

Photo of author

By Sakthi

கடையில் திருட வந்தவனுடன் துணிச்சலாக சண்டையிட்ட பாட்டி!

Sakthi

கனடா நாட்டில் இருக்கின்ற ஒரு பல்பொருள் அங்காடியில் எலைன் கால் அவே என்ற 73 வயதான ஒரு பார்ட்டி ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர் பொருட்களை திருட முயற்சித்ததாக சொல்லப்படுகிறது, எலைன் அவரைத் தடுத்து நிறுத்த முயன்றார்.

ஆனால் அந்த மர்ம நபர் அவரை கீழே தள்ளி விட முயற்சி செய்தார். இதன் காரணமாக, சுதாரித்துக்கொண்ட அந்த வயதான பெண்மணி மர்ம நபரின் முகமூடியைக் கழற்றியதுடன் பொருட்களையும் கைப்பற்றியிருக்கிறார்.

இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இதுதொடர்பாக அந்த வயதான பெண்மணி தெரிவிக்கும்போது, நான் திருடனை பிடிக்க முயற்சி செய்தேன்.

ஆனாலும் அவன் ஒரு கையில் பொருட்களும், இன்னொரு கையில் சைக்கிளும் வைத்திருந்ததால் அவனால் என்னை தடுக்க இயலவில்லை. திருடனின் முகமூடியை நான் கழற்றியெறிந்த பின்னர் அங்கிருந்து சைக்கிளில் ஓடிவிட்டான் என்று தெரிவித்திருக்கிறார். வயதான பெண்மணியின் துணிச்சலான செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.