காலையில் விரைவாக டிபன் செய்ய வேண்டும் என்பது பல இல்லதரசிகளுக்கு தலைவலியாக உள்ளது. இல்லதரசிகளின் காலை வேலை எப்பொழுதும் பரபரப்பாகவே இருக்கும். அப்படி இருக்கயில், அவர்கள் விரைவாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் உள்ள சூப்பரான ஊத்தப்பம் செய்யலாம் எப்படி செய்வது என பார்போம்.
தேவையானவை :
கடலை மாவு – 1 கப்
தயிர் – அரை கப்
அரிசி மாவு – 1 கப்,
வெங்காயம் – 2,
பிரெட் – 5,
பச்சைமிளகாய் – 5, கொத்தமல்லி – சிறிது,
எண்ணெய், உப்பு, சீரகம் – தேவையான அளவு.
செய்முறை :
பிரெட்டை பொடித்து வைத்து கொள்ளுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் போட்டு கடலை மாவு, அரிசி மாவு, தயிர், சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள்.
அது ஊத்தப்பம் மாவு பதத்திற்கு நன்றாக கலக்கி கொள்ளவும். அதன்பின்னர், தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் மாவை ஊத்தப்பமாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். அதன்பின்னர்,திரும்ப போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறலாம்.
குழந்தைகளுக்கு ஊத்தப்பம் செய்து கொடுக்கும் போது கேரட், தக்காளி போன்ற காய்கறிகளையும் சேர்த்து கலந்து ஊத்தப்பம் செய்து கொடுக்கலாம். இந்த ஊத்தப்பத்திற்கு தக்காளி, தேங்காய் சட்னி போன்றவை சூப்பரான காம்போ.