#Breaking பாடும் நிலா SPB-யின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைப்பு!
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75), கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அந்த நோயுடன் போராடி, உடல் நிலை தேறி வந்த நிலையில், இன்று பிற்பகல் 1.04 மணிக்கு ரசிக பெருமக்களை மீளா துயரத்தில் ஆழ்த்திவிட்டு இறைவனடி சேர்ந்தார்.
தற்போது அவரின் உடல் மருத்துவமனையிலிருந்து கொண்டுவரப்பட்டு சென்னை நுங்கம்பாக்கம் காம்தார்
நகரில்லுள்ள வீட்டில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பல்வேறு திரையுலகினரும் ரசிகர்களும் எஸ்பிபி -யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக,இரண்டு வினாடிகள் மட்டும் எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுகிறது.மேலும் குடியரசு தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும்,
திரையுலகினரும், ரசிகப் பெருமக்களும், சமூக வலைதளங்களில் அவர்களின் இரங்களை தெரிவித்து வருகின்றனர்.நாளை காலை வரை எஸ்பிபி -யின் உடல் அஞ்சலிக்காக வைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.பின்பு அவரது உடல் நாளை செங்குன்றம்
தாமரைபாக்கத்தில் உள்ள அவரின் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.