ஆடம் ஜாம்பாவின் சிறப்பான பந்துவீச்சு!!!  முதல் வெற்றியை பெற்ற ஆஸ்திரேலியா!!!

0
44
#image_title
ஆடம் ஜாம்பாவின் சிறப்பான பந்துவீச்சு!!!  முதல் வெற்றியை பெற்ற ஆஸ்திரேலியா!!!
ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா அவர்களின் சிறப்பான பந்துவீச்சினால் நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் நேற்று(அக்டோபர்16) லக்னோவில் நடைபெற்ற லீக் சுற்றில் இலங்கை அணியை ஆஸ்திரேலிய அணி எதிர் கொண்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட் செய்த இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சினால் ரன் எடுக்க முடியாமல் திணறியது.  தொடக்க வீரர்கள் பதும் நிசன்கா அரைசதம் அடித்து 61 ரன்களும், குசால் பிரேரா அரைசதம் அடித்து 78 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பாவின் பந்துவீச்சினால் ரன் எடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதையடுத்து இலங்கை அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஜாம்பா 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். மேக்ஸ்வெல் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
இதையடுத்து 210 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடங்கிய வீரர் டேவிட் வார்னர் 11 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இதையடுத்து களமிறங்கிய மார்னஸ் லபசக்னே மற்றொரு தொடக்கவீரர் மிட்செல் மார்ஷ் அவர்களுடன் சேர்ந்து ரன் குவிக்க தொடங்கினர். தெரிந்து விளையாடிய மிட்செல் மார்ஷ் அரைசதம் அடித்து 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து விளையாடிய மார்னஸ் லபசக்னே 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஜோஸ் இங்கிலிஸ் அரைசதம் அடித்து 58 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்று ஆட்டமிழந்தார். இறுதியாக களமிறங்கிய மேக்ஸ்வெல் 31 ரன்களும் மார்க் ஸ்டோய்னஸ் 20 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலிய அணி 35.2 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
அதாவது 210 ரன்கள் இலகக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணி 35.2 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்து இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடப்பு உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை ஆஸ்திரேலிய அணி பதிவு செய்தது. சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆடம் ஜாம்பா ஆட்டநாயகன் விருது வென்றார்.