உங்கள் வீட்டில் துடைப்பத்தை இந்த இடத்தில் மட்டும் வைக்காதீர்கள்..!!

Photo of author

By Priya

Broom Vastu Tips in Tamil: பொதுவாக ஒரு வீட்டை கட்டுவதற்கு முறைப்படி வாஸ்து சாஸ்திரம் எல்லாம் பார்த்து தான் கட்டுவார்கள். யாரும் ஏதோ கட்ட வேண்டும் என்பதற்காக வீட்டை கட்ட மாட்டார்கள். அந்த வகையில் நம் வீட்டில் பூஜை செய்யும் அறை, சமைக்கும் அறை என்று அனைத்தையும் பார்த்து பார்த்து கட்டுவார்கள். மேலும் சில பொருட்களை வீட்டில் வாஸ்து பார்த்து வைத்திருப்பார்கள். நம் வீட்டில் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு கடவுள் இருக்கிறார் என்று நம் வீட்டு பெரியவர்கள் கூறுவார்கள்.

அந்த வகையில் நம் வீட்டை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்வதற்கு நாம் பயன்படுத்துவது துடைப்பம். துடைப்பத்தை கண்ட இடங்களில் வைத்தால் வீட்டிற்கு ஆகாது என கூறுவார்கள். அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

துடைப்பம் வைக்க கூடாத இடங்கள்

பலரின் வீடுகளிலும் அவர்கள் சம்பாதிக்கும் பணம் கைகளில் தங்காமல் வருவதும் தெரியாமல், போவதும் தெரியாமல் இருக்கும். கணவன்-மனைவி இடையில் எப்பொழுதும் சண்டை வந்துக்கொண்டே இருக்கும். இவ்வாறு அனைத்து பிரச்சனைகள் வரும். ஆனால் அதற்கு காரணம் தான் என்னவென்று தெரியாமல் இருப்போம்.

துடைப்பத்தை மகாலெட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. மகாலெட்சுமியின் அம்சமாக பார்க்கப்படும் துடைப்பத்தை மேற்கு, தென் மேற்கு பகுதியில் வைக்கலாம் என கூறப்படுகிறது.

துடைப்பத்தை வடகிழக்கு, தென்கிழக்கு பகுதியில் வைக்க கூடாது. மேலும் பூஜை அறைகள், சமையல் அறை, படுக்கை அறையில் வைக்க கூடாது.

மேலும் பழைய துடைப்பத்தை வைத்து நீண்ட நாட்கள் வரை பயன்படுத்தக் கூடாது. புதிய துடைப்பத்தை வாங்கும் போது பழைய துடைப்பங்களை தூக்கி எறிந்துவிட வேண்டும். ஏனென்றால் அவைகள் நமக்கு எதிர்மறை ஆற்றலை கொடுக்கும்.

மேலும் இரண்டு, மூன்று துடைப்பங்களை ஒன்றாக வைக்க கூடாது. இதனால் வீட்டில் சண்டைகள் ஏற்படும்.

பழைய துடைப்பங்களை தூக்கி போடும் போது, சனிக்கிழமையில் தூக்கி போட்டால் நல்லது. யாருக்கும் பழைய துடைப்பங்களை தானமாக கொடுக்காதீர்கள். பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விட வேண்டும்.

மேலும் ஒருவர் வீட்டிற்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் கண் பார்வையில் துடைப்பத்தை வைக்க கூடாது. அது கண்திருஷ்டியை ஏற்படுத்தும்.

மேலும் துடைப்பத்தில் சிலர் நுனி உடைந்துவிடும் என்பதால், நுனி பகுதி மேல் நோக்கியவாறும், அடிப்பகுதி கீழ் தரையில் உள்ளது போன்று வைக்காமல் இருக்க வேண்டும். காரணம் லெட்சுமியை தலைகீழாக வைப்பதற்கு சமம். அடிப்பகுதி மேல், நுனி பகுதி கீழ் நோக்கியவாறு (thudaippam vaikkum murai) இருக்கலாம்.

ஒரு சிலர் வீட்டிற்குள் கூட்டும் துடைப்பத்தை, வெளியில் வாசல் கூட்டுவார்கள். அவ்வாறு செய்ய கூடாது. மேலும் துடைப்பத்தை கொண்டு யாரையும் விளையாட்டாக கூட அடிக்க கூடாது. அவ்வாறு செய்தால் மகாலெட்சுமியை அவமதிப்பதாகும்.

மேலும் படிக்க: வெள்ளி மோதிரம் அணிந்துள்ளீர்களா? அதிர்ஷ்டம் கிடைக்க இந்த விரலில் அணிந்துக்கொள்ளுங்கள்..!