இன்று தமிழ்நாட்டிற்கான 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமானது.தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பித்தவுடன் திருக்குறள் அவையில் தெரிவிக்கப்பட்டு சட்டசபையை தொடங்கி வைத்தார்.
சபாநாயகர். அதன் பிறகு இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார்.
இதற்கு முன்னதாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வருடமும் காகிதமில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
நிதி அமைச்சர் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து வாசித்துக் கொண்டிருந்தபோது சட்டசபை உறுப்பினர்கள் இருக்கைகள் முன்பாக வைக்கப்பட்டிருந்த மடிக்கணினியில் பட்ஜெட் விவரங்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை உரையை வாசிக்க ஆரம்பித்தவுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்ற அனுமதி வேண்டும் என கேட்டார். சபாநாயகர் அதனை நிராகரித்ததால் சட்டசபையில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் சோதனை உள்ளிட்டவை தொடர்பாக அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
முதல்வராக இருந்த உங்களுக்கு இன்று நிதிநிலை அறிக்கை மட்டுமே வாசிக்கப்படும் என்பது நன்றாக தெரியும். அவ்வாறு தெரிந்தே பேச வேண்டும் என்று கூச்சல் போடுகிறார்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு சபாநாயகர் பதில் வழங்கினார்.
அதிமுகவினர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் கோஷம் எழுப்பினார்கள். திமுக அரசு ஜனநாயகப்படுகொலையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. நிதிநிலை உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.