பட்ஜெட்டில் பாரபட்சம் எதுவும் காட்டவில்லை! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி! 

Photo of author

By Sakthi

பட்ஜெட்டில் பாரபட்சம் எதுவும் காட்டவில்லை! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!
சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ப்பட்டதை அடுத்து எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தது. இதையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் எதுவும் காட்டவில்லை என்று பேட்டி அளித்துள்ளார்.
கடந்த ஜூலை 23ம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பட்ஜெட் ஏழைகளுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று கூறினார்.
அதற்கு தகுந்த வகையில் இந்த பட்ஜெட்டில் ஏழைகளுக்காக பல அறிவிப்புகள் வெளியானது. மேலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள், கல்விக்கடன் குறித்த அறிவிப்புகளும் வெளியானது. மேலும் இந்த மத்திய பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அறிவிப்பு வெளியாகியது.
இந்நிலையில் ஆந்திரா மற்றும் பீகார் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறி எதிர்கட்சிகள் மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்நிலையில் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட்டில் எந்தவித பாரபட்சமும் காட்டவில்லை என்று பேட்டி அளித்துள்ளார்.
இது குறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் “நான் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை. குறிப்பிட்ட மாநிலங்களின் பெயர்களை குறிப்பிடாமல் மத்திய அரசு சில மாநிலங்களை ஒதுக்குகின்றது என்று எதிர்கட்சிகள் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றது.
ஒரு சில மாநிலங்களின் பெயர்களை குறிப்பிட்டு மற்ற மாநிலங்களின் பெயர்களை குறிப்பிடாமல் இருந்தால் அது புறக்கணிப்பு ஆகாது. அனைத்து மாநில மக்களும் பயன்பெறும் வகையில் தான் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.