டொனால்ட் டிரம்பின் காதுகளை உரசி சென்ற துப்பாக்கி குண்டுகள்! இணையத்தில் வீடியோ வைரல்!

Photo of author

By Sakthi

டொனால்ட் டிரம்பின் காதுகளை உரசி சென்ற துப்பாக்கி குண்டுகள்! இணையத்தில் வீடியோ வைரல்!

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் துப்பாக்கி குண்டுகள் அவருடைய காதுகளை உரசி செல்வது பதிவாகி இருக்கின்றது.

அமெரிக்கா நாட்டில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் தற்பொழுது அதிபராக இருக்கும் ஜோ பைடன் அவர்களை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடவுள்ளார்.

இந்நிலையில் இன்று(ஜூலை14) அமெரிக்கா நாட்டில் பென்சில்வேனியா நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுக்கு மத்தியில் டொனால்ட் டிரம்ப் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார். டொனால்ட் டிரம்ப் அவர்கள் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் மர்ம நபர்கள் சிலர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் முன்னாள் அதிபர் டிரம்பின் காதுகளை துப்பாக்கி குண்டு உரசி சென்ற நிலையில் அவருக்கு இரத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இரத்த காயத்துடன் டொனால்ட் டிரம்ப் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்த துப்பாக்கி சூட்டில் அங்கு கூடியிருந்த டொனால்ட் டிரம்ப் அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கு இந்திய பிரதமரும் டிரம்பின் நெருங்கிய நண்பருமான பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பான வீடியோ இணையத்தில் வாயிலாக வருகின்றது.

அந்த வீடியோவில் முன்னாள் அதிபர் டிரம்ப் பேசிக் கொண்டிருக்க திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்படுகின்றது. துப்பாக்கி சூடு நடத்தப்படுவது தெரிந்தவுடன் டிரம்ப் மற்றும் அவருடயை ஆதரவளர்கள் அனைவரும் கீழே குனிந்து விடுகின்றனர். அதன் பின்னர் பாதுகாவலர்கள் வந்து டொனால்ட் டிரம்ப் அவர்களை பாதுகாத்து அழைத்து செல்கின்றனர். இந்த துப்பாக்கி சூட்டில் டிரம்பின் காதுகள் மீது துப்பாக்கி குண்டுகள் உரசி சென்றுள்ளது. இதனால் அவருக்கு இரத்த காயமும் ஏற்பட்டது. இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Video Link:
https://x.com/bloombergblower/status/1812342347801178386