உலகின் சிறந்த பவுலராக பும்ரா திகழ்கிறார்!! ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் புகழாரம்!!
உலகின் நம்பர் 1 பவுலராக சிறந்த பவுலராக இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் திகழ்கிறார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்-லீ அவர்கள் புகழாராம் சூட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் மட்டுமில்லாமல் உலகளவில் சிறந்த பந்துவீச்சை ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் வெளிக்காட்டி வருகிறார். நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஒரு தோல்வியும் கூட பெறாமல் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்கு ஜஸ்பிரித் பும்ரா அவர்களின் வேகப்பந்து வீச்சும் முக்கிய காரணமாகும்.
இந்தியா ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடிய முக்கியமான போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது. குறிப்பாக பாகிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி தன்னுடைய பந்துவீச்சை ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் வெளிகாட்டினார். இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா அவர்கள்தான் உலகின் சிறந்த பவுலர் என்று ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்-லீ அவர்கள் புகழ்ந்து பேசியுள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அவர்களை பற்றி பிரெட்-லீ அவர்கள் “டி20, டெஸ்ட், ஓடிஐ என்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் சிறப்பாக பந்து வீசுகின்றார். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த பவுலராக ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் திகழ்கிறார். நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் கொடுக்காமல் 15 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் அபாரமான ஒரு பந்துவீச்சாளர் ஆவார்.
பந்துவீச்சு ஒரு பக்கம் இருக்க இந்திய அணியின் பேட்டிங் தரவரிசை அதை விட பலமாக இருக்கின்றது. பேட்டிங் ஆர்டரில் ஒவ்வொரு இடத்திலும் ஆதிக்கம் செலுத்தும் பேட்டர்கள் இருக்கின்றனர். மேலும் அதிரடியாக ரன்களை சேர்க்கும் ஹிட்டர்களும் இந்திய அணியின் பேட்டிங் தரவரிசையில் இருக்கின்றனர். இந்த பாராட்டுகளுக்கு எல்லாம் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் பொருத்தமானவர்கள் தான்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக மகேந்திர சிங் தோனி அவர்களின் தலைமையில் 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றி இருந்தது. அதன் பிறகு 11 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி நடத்திய டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் பும்ரா அவர்களை பிரெட்-லீ பாராட்டியுள்ளார்.