ஐபிஎல் ரசிகர்களுக்கு பும்ரா படைத்த! அந்த இமாலய சாதனையை பற்றி தெரியுமா!

0
174

ஐபிஎல்லில் புவனேஸ்வர் குமாரின் சாதனையை பின்னுக்குத் தள்ளி அபார சாதனை படைத்திருக்கிறார் பும்ரா.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் ஆன டிரென்ட் போல்ட் பும்ரா ஆகிய 2 பேரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுவதால், பந்துவீச்சில் மும்பை அணி மிரட்டி வருகின்றது.

ஐபிஎல்லின் இந்த சீசனில் மலிங்கா இல்லாத குறை தெரியாமல் மும்பை அணி பந்துவீச்சில் மிக அபாரமாக இருக்கின்றது.

நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்றதோடு மட்டுமல்லாமல், நடப்பு சாம்பியனுமான மும்பை அணி முதல் தகுதிச் சுற்றிலேயே டெல்லி அணியை தோல்வியுறச் செய்து, கடைசி போட்டிக்கு முன்னேறி இருக்கின்றது.

இந்த சீசனில் முதலில் இருந்து மிரட்டி வரும் பும்ரா, மற்றும் போல்ட், இணை டெல்லி அணியையும் மிரட்டியது.

முதல் ஓவரில் போல்ட் 2 விக்கெட் வீழ்த்திய பும்ரா இரண்டாவது ஓவரில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் டெல்லி அணி ஒரு ரன் கூட அடிக்காமல் 3 விக்கெட்டுகளை இழந்து இருந்தது இந்த ஆட்டத்தில் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், மார்கஸ், ஸ்டோய்னிஸ், மற்றும் டேனியல் சாங்ஸ் ஆகிய 4 பேரையும் வீழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்லில் ஒரு சீசனில் மிக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் பும்ரா இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சீசனில் புவனேஸ்வர் குமார் வீழ்த்திய 26 விக்கெட் தான் ஒரு சீசனில் இந்திய பந்துவீச்சாளர் விழுத்திய அதிகபட்ச விக்கெட்டாக இருந்துவந்தது.

புவனேஸ்வர் குமாரின் சாதனையை முறியடித்து ஐபிஎல்லில் ஒரு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்திருக்கின்றார்.

Previous articleகதறி அழுத சம்யுக்தா! என்ன நடந்தது பிக்பாஸ் வீட்டில்!
Next articleவேல் யாத்திரைக்கு தடைவிதித்ததை அடுத்து அதிரடி முடிவெடுத்த பாஜக! அதிர்ந்து போன தமிழகம்!