ராஜஸ்தானில் பேருந்து மற்றும் ட்ரக் ஏற்படுத்திய பயங்கர விபத்து! தீப்பற்றி எரிந்த பேருந்து! 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் மற்றும் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் இன்று காலை ட்ரக் மற்றும் பயணிகளுடன் பேருந்து நேருக்கு நேராக மோதிக் கொண்டது. இந்த விபத்தில் 12 பேர் உடல் கருகி பலியாகினர். இது குறித்து அதில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறியுள்ளார். அதில் அவர் 36 க்கும் மேற்பட்ட பயணிகளோடு இன்று காலை 9.55 மணி அளவில் பலோத்ராவிலிருந்து ஜோத்பூருக்கு பேருந்து புறப்பட்டு சென்று உள்ளது.
பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலையின் தவறான பக்கத்தில் இருந்து ஒரு லாரி வந்து உள்ளது. அது வேகமாக வந்து பேருந்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது என்றும், லாரி மோதிய உடனேயே பேருந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது என்றும் கூறியுள்ளார்.
அந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 22 க்கும் அதிகமான நபர்கள் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தினால் படு காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.