வெடித்து சிதறிய பெயர்ந்து 41 பேர் மாயம்!

Photo of author

By Sakthi

கொரோனா உலக நாடுகளுக்கு பரவிய விவகாரத்தில் உலகநாடுகள் சீனாவின் மீது கடும்கோபத்திலிருக்கின்றன.இந்த நிலையில், வடகிழக்கு சீனாவில் நேற்று முன்தினம் பேருந்து ஒன்று வெடித்து ஒருவர் பலியானார் மற்றும் 42 பேர் படுகாயமடைந்தார்கள்.

லியோனிங் மாகாணத்தில் ஒரு பேருந்து திடீரென்று வெடித்து சிதறியது. வெடிப்பு ஏற்பட்ட சமயத்தில் பெரும் சத்தம் கேட்டதாகவும், ஆனால் பேருந்து தீ பிடிக்கவில்லை என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த விபத்தில் ஒருவர் பலியாகியிருக்கிறார் 2பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். மேலும் 40 பேர் காயமடைந்திருக்கிறார்கள். என்று சொல்லப்படுகிறது.

பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த நிலையில் பெரும் குப்பை சிதறல்களுடன் பேருந்து சாலையோரத்தில் நிற்கும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியிருக்கிறது.

வெடிப்பிற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.