பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் கவனத்திற்கு! பயணிகளே உஷார்!

Photo of author

By Sakthi

மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயண சீட்டு இல்லாமல் பயணம் செய்த சுமார் 4 ஆயிரத்து 644 நபர்களிடமிருந்து ரூபாய் 5 லட்சத்து 52 ஆயிரத்து 50 வரை அபராதம் வசூலிக்க பட்டிருப்பதாக மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்திருக்கின்றார்.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தமிழ்நாட்டில் அனைத்து போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டது.

வைரஸ் தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வர பட்டதை அடுத்து, மக்களின் பொருளாதார காரணங்களுக்காக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்து இருக்கின்றது.

அந்த வகையில் பேருந்துகளும் இயங்கலாம், ஆனால் உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் உடன் இயங்க வேண்டும் என்று தெரிவித்தது.

சுமார் ஐந்து மாத இடைவெளிக்குப்பின் மறுபடியும் பேருந்துகள் இயங்க ஆரம்பித்து இருக்கின்றன.

இந்தநிலையில், அரசு பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த நபர்களிடம் இருந்து அபராதத் தொகை பெறப்பட்டு இருக்கின்றது இது சம்பந்தமாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது.

அரசு பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல், மற்றும் அரசு போக்குவரத்து கழகத்தால் வழங்கப்பட்ட பயண அட்டை ஆகியவை இன்றி பயணம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதன் காரணமாக போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்படுகின்றது, இதனைத் தொடர்ந்து பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து அரசாங்கம் எடுத்து வருகின்றது.

பயணிகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, தினமும் பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றது.

பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வோர் களிடமிருந்து அபராத தொகையாக அதிகபட்சம் 500 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகின்றது.

பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களிடமிருந்து , கடந்த செப்டம்பர் மாதத்தில் சுமார் 1522 நபர்களிடம் அபராதத் தொகையாக ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 550 ரூபாயும், அக்டோபர் மாதத்தில் 3 லட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபாய் ஆக மொத்தம் 4 ஆயிரத்து 644 நபர்களிடம் இருந்து மொத்த அபராதத் தொகையாக 5 லட்சத்து 52 ஆயிரத்து 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு இருக்கின்றது என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கின்றது.