650 அடி ஆழத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 32 பேர் பலியான பரிதாபம்!

Photo of author

By Hasini

650 அடி ஆழத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 32 பேர் பலியான பரிதாபம்!

தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமா மற்றும் சென்ரல் லண்டன் நகரை இணைக்கும் சாலை ஒன்றில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்ஸில் மொத்தம் 63 பேர் பயணம் மேற்கொண்டனர். கார்ரிடிரா என்ற சென்ட்ரல் சாலையில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்ற போது, திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து 650 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து மிகப் பெரிய விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த நபர்களில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த விபத்திற்கு காரணம் என்ன என ஆராய்ந்ததில் மலைப்பாங்கான பகுதியில் பஸ் மிகவும் வேகமாக சென்றது தான் இந்த விபத்துக்கு காரணம் எனவும் விசாரணையின் மூலம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாருங்கள் 2021 வருடம் முழுவதுமே ஏதோ ஒரு ஆபத்துக்கள் மக்களை துன்புறுத்திக் கொண்டே வருகிறது. நாமெல்லாம் எவ்வளவு நாள் இருப்போம் என்றே தெரியாத நிலைதான் நீடித்து வருகிறது. எனவே இருக்கும் வரை அனைவரிடமும் அன்புடன் இருப்போம். இயற்கை நமக்கு அடுத்தடுத்து நமக்கு என்ன வைத்திருக்கிறது என தெரியவில்லை. எனவே இருக்கும் வரை மகிழ்ச்சியாய் இருப்போம்.