பொதுவாக நம்மில் பலருக்கு தொழில் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு யோகம் இருக்க வேண்டும் என்று தெரிவிப்பார்கள். அதற்காக யோகம் வரும் என்று நாம் அதற்கான காலத்தை எதிர்பார்க்க கூடாது.
ஆனாலும் ஜாதக ரீதியாக நம்பிக்கை இருப்பவர்கள் தங்களுடைய ராசிக்கு எந்த தொழில் தொடங்கினால் வெற்றி பெறலாம் என்பதை நன்றாக ஜோதிடம் அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம். ஆனாலும் லக்னத்தில் இருந்து 11ம் இடத்தில் எந்த கிரகம் இருந்தால் எந்த தொழில் செய்யலாம் என்பது தொடர்பாக ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. அது தொடர்பாக தற்போது நாம் காணலாம்.
11ம் இடத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் தந்தை வழி தொழில் மூலமாக லாபம் அடைவார்கள். 11ம் இடத்தில் சந்திரன் இருக்க பிறந்தவர்கள் வாகன சுகபோக வாழ்வோடு வாழ்வார்கள் ஆண்களுக்கு திருமணத்திற்கு பிறகு புது மனைவியால் சொத்துக்கள் குவியும்.
11ம் இடத்தில் செவ்வாய் இருக்க பிறந்தவர்கள் துணிச்சல் மிக்கவர்கள் பல வழிகளிலும் பொருள் கிடைக்கும் நினைத்த மிகப்பெரிய எண்ணங்கள் கைகூடும். சொந்த நிலமும், வீடுகளும் அமையும்.
11ம் இடத்தில் புதன் இருக்க பிறந்தவர்கள் மனவளமும், அறிவு வளமும் பெருகும் மாமேதையாக விளங்குவார்கள். பொறியியல் நிர்வாகம் ஆடிட்டர் துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
11ல் குரு பகவான் இருக்க பிறந்தவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக விளங்குவார்கள். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.
11ம் இடத்தில் சுக்கிரன் இருக்க பிறந்தவர்கள் பெரும் பகுதி ஊர் சுற்றி விளம்பரத்தை பெருக்குவார்கள். வாசனை திரவியங்கள் விற்று பொருளீட்டுவார்கள்.
11ம் இடத்தில் சனி இருக்க பிறந்தவர்கள் பல ஆட்களை வேலைக்கு அமர்த்தி தொழில் செய்வார்கள். கட்டிடம் ஒப்பந்த தொழில்கள் கை கொடுக்கும்.
11ல் ராகு இருக்க பிறந்தவர்கள் ராணுவத்துறைக்குச் சென்று சம்பாதிப்பார்கள். அயல்நாடு சென்று பொருட்களை வாங்கி விற்பனை செய்வார்கள். அதன் மூலமாக லாபம் அடைவார்கள்.
11ல் கேது இருக்க பிறந்தவர்கள் திடீர் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். ஏழையாக பிறந்தவரும் திடீர் இலாபத்தை பெறுவார்கள். தர்ம காரியம் செய்வார்கள்.