விஜய் சீமான் கூட்டணி.. முக்கிய தகவலை வெளியிட்ட புஸ்ஸி ஆனந்த்!!

0
179
Tamizhaga vetri kazhagam kotani
#image_title

Tamizhaga vetri kazhagam kotani: மக்களவை தேர்தல் முடிந்து நாட்டின் 3வது முறையாக மோடி பிரதமர் பதவியேற்றுள்ளார். ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் கூட்டணியுடனும், தனித்தும் போட்டியிட்டது. இதில் எதிர்பார்க்கப்படாத பல நிகழ்வுகள் நடந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் பாஜக கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

தமிழகத்தில் தனித்து போட்டியிட்ட நாதக மற்றும் 2 தொதிகளில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக மாறின. இந்த இரு கட்சிகளுக்கும் நடிகர் விஜய் தனது தவெக கட்சியின் (Tamizhaga vetri kazhagam) சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த மக்களவையில் தோல்வியடைந்த பல கட்சிகள் 2026 எங்கள் இலக்கு என்று கூற ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அப்போது தவெக தொண்டர்களிடம் பேசும் போது நாம் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். மற்றவர்களை பற்றி நாம் விமர்சனம் செய்ய கூடாது. முதலில் தொழில் செய்து சம்பாதிக்க வேண்டும். பிறகு அதனை வைத்து குடும்பத்தை கவனிக்க வேண்டும். சம்பாதித்த பணத்தில் 1 சதவீதம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது தான் தவெக தலைவர் விஜய்யின் லட்சியம். அதனை நாமும் பின்பற்ற வேண்டும். மேலும் 2026 நம்முடைய இலக்கு அதற்கு அனைவரும் உழைக்க வேண்டும் என கூறினார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த் நாதக (naam tamilar katchi) உடன் கூட்டணி வைப்பீர்களா? என செய்தியாளர்களின் கேள்விக்கு இதற்கு எங்கள் தலைவர் விஜய் தான் பதில் கூறுவார். கூட்டணி பற்றி அறிவிப்பை அவர்தான் தெரிவிப்பார் என கூறினார். மேலும் தவெக மாநில கட்சியாக அங்கீகரிக்க விண்ணப்பம் காெடுக்கப்பட்டுள்ளது. அதனை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே அது குறித்த முடிவை இந்த மாதம் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். மேலும் எங்கள் இலக்கு 2026. இன்னும் 2 வருட காலங்கள் உள்ளது அதற்குள் அவசர பட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: தமிழக அரசியலில் திடீர் திருப்பம்! நடிகர் விஜய் சீமான் மற்றும் திருமாவளவனுக்கு வாழ்த்து