துடைப்பத்தை இந்த நாட்களில் வாங்கி பாருங்கள்..!! செல்வம் பெருகும்..!!

Photo of author

By Janani

துடைப்பத்தை இந்த நாட்களில் வாங்கி பாருங்கள்..!! செல்வம் பெருகும்..!!

Janani

துடைப்பம் என்பது சாதாரண ஒரு பொருள் என்று தான் நாம் நினைப்போம். ஆனால் துடைப்பம் என்பது ஒரு வீட்டில் மிகவும் முக்கியமான ஒரு பொருளாகும். ஏனென்றால் துடைப்பம் என்பது மகாலட்சுமியின் அம்சமாக வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. மேலும் அந்த துடைப்பம் தான் நமது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. எனவே துடைப்பம் என்பதை சரியான முறையில் கையாள்வது என்பது மிகவும் அவசியம்.

இந்த துடைப்பம் என்பதை நமது வீட்டிற்கு வரும் வேறு யாருடைய கண்ணிற்கும் தெரியாதவாறு வைக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. அதாவது நமது செல்வத்தை எவ்வாறு மறைவாக வைக்கிறோமோ, அதனைப் போன்று தான் துடைப்பத்தையும் யாரது கண்ணிலும் படாதவாறு பகல் நேரங்களில் வைக்க வேண்டும்.

இரவு நேரங்களில் எந்த ஒரு தீய சக்திகளும் நமது வீட்டிற்குள் வராமல் இருப்பதற்காக நமது வீட்டின் நிலை வாசலின் அருகே துடைப்பத்தை வைத்துக் கொள்ளலாம்.
ஏனென்றால் இரவு நேரங்களில் தான் நமது வீட்டிற்கு தீய சக்திகள், பில்லி, சூனியம், கண் திருஷ்டிகள் ஆகிய அனைத்தும் உள்ளே வரும். எனவே இரவு நேரங்களில் நமது வீட்டின் நிலை வாசலில் இந்த துடைப்பத்தை போட்டு விட வேண்டும்.

மேலும் மகாலட்சுமியின் அம்சமாக திகழக்கூடிய இந்த துடைப்பத்தை யாரது காலிலும் மிதிக்காதவாறு ஓரமாக வைக்க வேண்டும்.
துடைப்பத்தையும், முறத்தையும் எங்கு எப்படி வைப்பது என்பதற்கு சில விதிமுறைகள் நாம் கடைபிடிக்க அது மகாலக்ஷ்மியை திருப்திபடுத்தும்.

உங்கள் கனவில் துடைப்பம் வந்தால் அது நல்லதாக கருதப்படுகிறது. துடைப்பம் வீட்டின் செல்வச் செழிப்பின் அடையாளமாகும். இதை எப்போதும் மறைத்து வைக்க வேண்டும்.
துடைப்பத்தை தலைகீழாக வைக்காதீர்கள். இப்படி வைப்பதால் சண்டை சச்சரவுகள் அதிகமாகும்.

சரியாக வைத்தால்தான் நேர்மறை சக்தி அதிகரிக்கும். துடைப்பத்தை எப்போதும் சுத்தமாகவே வைத்திருக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்யும் போது அதில் முடி சிக்கிக் கொண்டிருக்கும். முடிகளை எடுத்துக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டு அதை சுத்தமாக வையுங்கள். வீட்டில் இருந்து வெளியே ஒருவர் சென்றபிறகு பெருக்குவதைத் தடுக்க வேண்டும். ஒருமணி நேரம் கழித்துதான் பெருக்க வேண்டும்.

வீட்டைக் காலி செய்யும் போது சிலர் பழைய துடைப்பத்தை விட்டுச் செல்வார்கள். அப்படி வைத்தால் உங்கள் வீட்டு மகாலக்ஷ்மியை நீங்கள் குடியிருந்த வீட்டிலேயே விட்டுச் செல்வதாக அர்த்தம். அதைத் தனித்தனியாக பிரித்துப் போடுவது நல்லது‌.

செவ்வாய், சனிக்கிழமைகளில் துடைப்பம் வாங்கலாம் வீட்டில் செல்வம் பெருகும், பொருளாதார நிலை மேம்படும். தேய்பிறை நாட்களில் துடைப்பம் வாங்குவது நல்லது. துடைப்பத்தை தானமாகக் கொடுக்காதீர்கள்.