ஒவ்வொரு குடும்பத்திற்கும் முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் அந்த குடும்பத்தினுடைய குலதெய்வம் மட்டும்தான். இந்த குல தெய்வத்தின் ஆசி அந்த குடும்பத்திற்கு கிடைத்தால் மட்டுமே அந்த குடும்பம் முன்னேற்றம் அடைய முடியும். மேலும் மற்ற தெய்வங்களின் அருளையும் பெற முடியும். குலதெய்வத்தின் அருள் ஒரு குடும்பத்திற்கு இல்லை என்றால், தீராத கஷ்டங்கள் வந்து சேரும். அது மட்டுமன்றி மற்ற தெய்வங்களின் அனுக்கிரகமும் கிடைக்காது.
குலதெய்வத்தை மறவாமல் அவ்வபோது சென்று வணங்கி வர வேண்டும். நமது குலதெய்வத்திற்காக என ஒரு செயலை செய்தோம் என்றால், அந்த குலதெய்வம் நமக்கு மூன்று மடங்கு பலன்களை அள்ளிக் கொடுக்கும். குலதெய்வ கோவிலுக்கு நாம் செல்லும் பொழுது ஒரு மூன்று பொருட்களை மறவாமல் வாங்கிச் சென்றோம் என்றால், அதற்கான பலன் நமது அடுத்த தலைமுறையினருக்கும் சேர்ந்து கிடைக்கும்.
1. அரிசி:
ஒரு சிலருக்கு கோவில் மிகவும் பெரிய குலதெய்வ கோவிலாக இருக்கும். அந்த கோவில்களில் செய்யக்கூடிய பூஜை, புனஸ்காபங்களுக்கு தேவையான பொருட்களையும், பணத்தையும் கொடுப்பதற்கு ஆட்கள் இருப்பார்கள்.
ஆனால் சிறிய கோவிலாக இருக்கக்கூடிய குல தெய்வங்களுக்கு, அதாவது மக்கள் கூட்டம் குறைவாக செல்லக்கூடிய குலதெய்வ கோவில்களுக்கு சரியாக பூஜை மற்றும் சாமிக்கு தேவையான நெய்வேத்தியம் ஆகியவற்றை செய்யாமல் இருப்பர்.
அவ்வாறு இருக்கக்கூடிய குலதெய்வ கோவிலுக்கு ஒரு மாதத்திற்கு அல்லது நம்மால் முடிந்த அளவிற்கு தேவையான பூஜை பொருட்களை வாங்கி கொள்வதற்காக பணமோ அல்லது அரிசியையோ வாங்கி கொடுத்தால் நமது குடும்பம் சுபிட்சம் பெறும்.
குலதெய்வ கோவில்களில் மாதத்திற்கு ஒரு முறை ஏனும் அதாவது அமாவாசை அல்லது பௌர்ணமி நாட்களில் பூஜை என்பது கண்டிப்பாக நடக்க வேண்டும்.
அந்த பூஜைக்கு தேவையான ஏற்பாடுகள் செய்வதற்கு ஆட்கள் குறைவாக இருக்கக்கூடிய சமயத்தில், நாம் பணமோ அல்லது அரிசியோ கொடுத்து உதவினால், நமது குடும்பத்தில் செல்வ வளம் மற்றும் அன்ன குறைவு ஏற்படாமல் இருக்கும். நமது குலதெய்வத்தை எப்பொழுதும் பட்டினியாக விடக்கூடாது.
2. கோவில் கருவறை இருளைப் போக்க தேவையான தீபம்:
நமது குலதெய்வ கோவிலுக்கு என்று ஒரு கருவறை இருக்கும். அந்த கருவறை எப்பொழுதும் ஒளியுடன் தான் இருக்க வேண்டும்.
அந்தக் கருவறைக்கு தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் விளக்கு ஏற்றி ஒளியை உருவாக்க வேண்டும்.
கோவில் கருவறையை ஒளிமயமாக வைத்துக் கொண்டால்தான் நமது வாழ்க்கையும் ஒளிமயமாக இருக்கும்.
எனவே கோவிலுக்கு விளக்கேற்ற தேவைப்படும் எண்ணெய், விளக்குகள் மற்றும் திரிகளை வாங்கிக் கொடுப்பதும் பல சிறப்புகளை நமக்குத் தேடித் தரும்.
3. குலதெய்வ கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்கள்:
குலதெய்வ கோவிலுக்கு நாம் செல்லும் பொழுது நமது தெய்வத்திற்கு பூஜை செய்ய தேவையான மஞ்சள், குங்குமம், சந்தனம், தீபம் இது போன்ற பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வதும் பலவிதமான பலன்களை நமக்குத் தரும்.
கோவிலுக்கு செல்லும் பொழுது நாம் வழிபாடு செய்வதற்கு என தனியாக பூஜை பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வோம். ஆனால் நாம் அடிக்கடி கோவிலுக்கு செல்ல மாட்டோம். அவ்வாறு இருக்கையில் ஒரு மாதத்திற்கோ அல்லது இரண்டு மாதத்திற்கோ நம்மால் முடிந்த அளவிற்கு தேவையான பூஜை பொருட்களை கோவிலுக்கு வாங்கி கொடுத்து விட்டு வரலாம்.
இவ்வாறு நமது குலதெய்வத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் நம்மால் முடிந்த அளவிற்கு வாங்கிக் கொடுத்துவிட்டு வருவதன் மூலம், நமது குடும்பம் மற்றும் நமது வம்சாவழி அனைத்தும் சுபிட்சமாகவும், செல்வ வளத்துடனும், மகிழ்ச்சியுடனும், அன்ன குறைவு ஏற்படாமலும் இருப்பார்கள்.
நமது குல தெய்வத்திற்கு என நாம் செய்யும் பொழுது, நமது குலதெய்வம் நமக்காக நமது இல்லத்திற்கு வந்து, நமக்கு தேவையானவற்றை கொடுக்கும்.