இப்படி செய்தால் ஈசியாக தட்கலில் டிக்கெட் பெற முடியும்! மறக்காமல் இந்த நேரத்தை மட்டும் மிஸ் பண்ணாதீங்க! 

Photo of author

By Sakthi

பண்டிகை காலங்களில் இரயில் பயணங்களில் ஸ்லீப்பர், ஏசி கிளாஸ் போன்ற டிக்கெட்டுகளை தட்கலில் ஈசியாக பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பண்டிகை காலம் விடுமுறை காலம் வந்துவிட்டால் வேலை செய்யம் இடத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்ல விரும்புவார்கள். ஒரு சிலர் பேருந்து பயணங்களை விரும்புவார்கள். ஒரு சிலர் இரயில் பயணங்களை விரும்புவார்கள். பணம் அதிகமாக இருப்பவர்கள் விமானப் பயணம் விரும்புவதும் உண்டு.

இவர்களில் சொந்த ஊர்களுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சில வாரங்களுக்கு முன்னரே இரயில், பேருந்து டிக்கெட்டுகளை  முன்பதிவு செய்து விடுவார்கள். கடைசி நேரத்தில் சொந்த ஊர்களுக்கு செல்லலாம் என்று முடிவெடுக்கும் ஒரு சில நபர்கள் பேருந்தில் செல்வதை விட இரயிலில் செல்லலாம் என்று டிக்கெட் புக் செய்யலாம் என்று பார்த்தால் டிக்கெட் இருக்காது.

சரி தட்கலில் டிக்கெட் புக் செய்யலாம் என்று பார்த்தால் தட்கலில் டிக் புக் செய்ய ஐஆர்சிடிசி தளத்தை ஓபன் செய்தவுடன் டிக்கெட்டுகள் அனைத்தும் காலியாகி விடும். இதற்கு சிரமம் இல்லாமல் ஈசியாக எவ்வாறு தட்கல் டிக்கெட் பெறுவது என்று பார்க்கலாம்.

முதலில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு நாம் நம்முடைய இணையத்தின் இணைப்பு வேகமாக இருக்கின்றதா இல்லையா என்று பார்க்க வேண்டும். தட்கலில் முன்பதிவு செய்வதற்கு 1 முதல் 2 நிமிடங்கள் சாளரம் கிடைப்பது இல்லை. இவ்வாறான சூழ்நிலையில் இணையத்தின் இணைப்பு மிகவும் மோசமாக இருந்தால் தட்கல் டிக்கெட் பெறுவது கடினம்.

இரண்டாவதாக சரியான நேரத்தில் அதாவது தட்கல் டிக்கெட் ஓபன் செய்யும் நேரத்தில் உள்நுழையாமல் ஒரு சில நிமிடங்களுக்கு முன்னதாக ஐஆர்சிடிசி இணையதளத்திற்குள் உள் நுழைய வேண்டும்.

அதாவது ஏசி பெட்டிகளுக்கு தட்கல் டிக்கெட் புக் செய்ய தினமும் காலை 10 மணிக்கு முன்பதிவு தொடங்குகின்றது. அதே போல ஸ்லீப்பர் டிக்கெட்டுகளுக்கு தினமும் காலை 11 மணிக்கு முன்பதிவு தொடங்குகின்றது. எனவே முன்பதிவு தொடங்கும் முன் 2 அல்லது 3 நிமிடங்களுக்கு முன்னதாக உள் நுழைய வேண்டும்.

மூன்றாவதாக தட்கலில் டிக்கெட் செய்யும் பயணிகளுக்காக ஐஆர்சிடிசி மாஸ்டர் லிஸ்ட் என்ற சிறப்பான ஒரு சேவையை வழங்குகின்றது. இதன் மூலமாக தட்கல் டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே தேவையான விவரங்களை உள்ளிட முடியும்.

இந்த மாஸ்டர் லிஸ்ட் முறையால் முன்பதிவு செய்யும் பொழுது அதிகமான நேரம் குறைகின்றது. அதாவது முன்பதிவு தொடங்கியபின் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு தேவையான விவரங்களை உள்ளிட்டு அதன் பின்னர் முன்பதிவு செய்வதை விட ஏற்கனவே விவரங்கள் அனைத்தையும் உள்ளீடு செய்து வைத்திருந்தால் முன்பதிவு மட்டும் செய்து கொள்ளலாம். இது ஈசியாக இருக்கும்.