இடைத்தேர்தல் மூலம் வாழ்வா? சாவா? நிலைக்கு தள்ளப்பட்ட திமுக!
நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்று முன்பு ஆரம்பித்துள்ளது உள்ளது.இரண்டாவது சுற்று முடிவடைந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் ஆளும் அதிமுக முன்னிலை வகிக்கிறது.
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த 21 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் 84.41 சதவிகித வாக்குகளும், நாங்குநேரி தொகுதியில் 66 சதவிகித வாக்குகளும் பதிவாகின என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதி வாக்கு எண்ணிக்கை விழுப்புரம் அருகேயுள்ள இ.எஸ்.பொறியியல் கல்லூரியிலும், நாங்குநேரி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியிலும் நடைபெறுகிறது. இதற்காக இரண்டு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் சீலிடப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இது இடைத்தேர்தலாக இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என கூறி வந்த திமுகவுக்கு வாழ்வா சாவா என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.ஏனென்றால் இந்த இரண்டு தொகுதிகளும் ஏற்கனவே திமுக வசம் இருந்தன. இவ்வாறு ஏற்கனவே தங்களிடம் இருந்த தொகுதிகளை காப்பாற்றி கொள்ளவே பிரச்சாரத்தில் திமுக கடும் போட்டியை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இதற்காக வன்னியர்கள் அதிகமாக வசிக்கும் விக்கிரவாண்டி தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் காலம் காலமாக வன்னியர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த உள் இட ஒதுக்கீடு கூட தருவதாக திமுக தரப்பு வாக்குறுதி தந்துள்ளது.இதெல்லாம் பயனளிக்குமா? என்று தேர்தல் முடிவுகளில் தெரிந்து விடும்.
கடந்த மக்களவை தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இருந்தாலும் அந்த வெற்றி உண்மையானது அல்ல என அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. கல்வி கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி என திமுக கொடுத்த பொய்யான வாக்குறுதிகள் தான் வெற்றி பெற செய்தது என குற்றம் சுமத்தப்பட்டது. கடைசியாக நடந்த நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவை தேர்தல் முடிவும் இதை தான் உறுதி செய்தது. திமுக வெற்றி பெற்ற எல்லா தொகுதிகளையும் விட வேலூர் தொகுதி மறு தேர்தலில் வெறும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி என இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றிப்பெற வாய்ப்புள்ளது என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. வாக்கு எண்ணிக்கையில் அதிமுக முன்னிலை வகிப்பதும் இதை உறுதி செய்கிறது.இதையும் மீறி திமுக வெற்றி பெற்றால் கூட மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் இருக்கும்.
இவ்வாறு ஏற்கனவே தங்களிடம் இருந்த தொகுதிகளை மீண்டும் கைபற்றவே திமுவிற்கு கடினமான போட்டியை உருவாக்கியுள்ளது அதிமுக தரப்பு. இந்நிலையில் இதே நிலை தொடரும் பட்சத்தில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று கூறி வந்த திமுகவுக்கு கடும் போட்டியை உருவாகும்.