பெண்களை இழிவுபடுத்தி பேசிய சி.வி .சண்முகம்.. தொடரும் கண்டனங்கள்!!

0
143
C.V.Shanmugam who insulted women..Continuing condemnations!!
C.V.Shanmugam who insulted women..Continuing condemnations!!

ADMK DMK: அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பூத் கமிட்டி கூட்டத்தில் பெண்களை மிகவும் தரக்குறைவாக பேசியதாக அவர் மீது பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. சி.வி சண்முகம் அதிமுக கூட்டத்தில் வழக்கம் போல் திமுக அரசை வஞ்சித்து பேசியதோடு, அவர்களின் செயல்பாடுகளுக்கும் கண்டனத்தை தெரிவித்தார்.

மேலும் திமுக அரசு மிக்ஸி மற்றும் கிரைண்டர் போன்றவற்றை இலவசமாக தருவதை சுட்டி காட்டி பேசிய அவர், இந்த பொருட்கள் போலவே தேர்தல் நேரத்தில் திமுக ஆளுக்கொரு மனைவியை கூட இலவசமாக கொடுப்பார்கள் என்று பெண்களை தரக்குறைவாக, இலவச பொருட்களுடன் ஒப்பிட்டு பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய திமுகவை சேர்ந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சி.வி சண்முகம் மனிதராக இருப்பதற்கே தகுதியற்றவர் என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். மேலும் திராவிட மாடல் அரசு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, அவர்களின் நலனை உயர்த்தி வருகிறது. ஆனால் அரசின் இலவச திட்டங்களோடு பெண்களை ஒப்பிட்டு அறுவருக்கதக்க கருத்தை வெளியிட்டிருக்கிறார் சி.வி சண்முகம்.

இதன் மூலம் அதிமுகவுக்கு பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா இருக்கும் போது சிவி சண்முகம் இப்படி பேசி இருக்க முடியுமா? அப்படி பேசியிருந்தால் அவர் இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கும். ஆனால் இபிஎஸ் இதற்கு ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை. பெண்கள் பயணம் செய்யும் பேருந்தை இழிவாக பேசியவர் தானே எடப்பாடி பழனிச்சாமி. அப்படி இருக்க அவர் எப்படி இதற்கு கண்டனம் தெரிவிப்பார் என்றும் கூறினார்.

Previous articleஉருவாகும் அதிமுக-தவெக கூட்டணி.. கழட்டி விடப்பட்ட பாஜக.. இபிஎஸ்யின் திடீர் முடிவு!!
Next articleபாமக கொடியுடன் இபிஎஸ்க்கு வரவேற்பு.. வாய் திறக்காத இபிஎஸ்.. பரபரப்பில் தேர்தல் களம்!!