விடிய விடிய நடந்த ஆலோசனை..! அமைச்சர் பதவிகளை பங்கிடுவதில் சிக்கல்..! “எதிர்பார்ப்பில் பதவியேற்பு விழா”

0
246
Modi Cabinet discussion
#image_title

Modi Cabinet discussion: மக்களவை தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மத்தியில் ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. இந்த முறை தனிப்பெரும்பான்மையை இழந்த பாஜக கூட்டணி நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி,சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி,குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ளது.

குடியரசு தலைவரை நேரில் சந்தித்து, மத்தியில் ஆட்சி அமைக்க பாஜக கோரியிருந்தது. அதன்படி இன்று மாலை (ஜூன் 9) நாட்டின் 3வது பிரதமராக பொறுப்பேற்க உள்ளார் மோடி. இவர் பதவியேற்பு விழாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் டெல்லி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரமண்டமாக விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடியுடன், பதவியேற்க்க போகும் மற்ற அமைச்சர்கள் குறித்த எதிர்ப்பார்பு எழுந்துள்ளது.

எந்தெந்த கட்சியினருக்கு எந்தெந்த பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளது என பெரும் எதிர்ப்பார்பில் இன்று நடைபெறவிருக்கும் பதவியேற்பு விழா மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் உள்ளது. மேலும் கடந்த முறை எந்த கட்சியின் ஆதரவும் இன்றி தனிப்பெரும்பான்மையாக வென்ற பாஜக, அப்பொழுதே மற்ற கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் பதவியை ஒதுக்கீடு செய்வதில் சிரமத்தை சந்தித்தது. மேலும் தற்போது மெஜாரிட்டி இல்லாமல் மைனாரிட்டி ஆட்சி அமைய உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி பொறுப்பை பெற போகும் பாஜக, மற்ற கட்சிகள் கேட்கும் அமைச்சர் பதவிகளை பிரித்து கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெற உள்ள நிலையில், இன்று ஜூன் 9 விடியற்காலை முதலே பாஜக முக்கிய நிர்வாகிகளான நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ஷா அடங்கிய குழு அமைச்சர் பதவிகளை பிரித்து கொடுப்பதில் திணறிவருவதாக தகவல் வெளிவந்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பிட்ட துறையை ஒதுக்கி தர வேண்டும் என சிபாரிகள் வந்த வண்ணம் உள்ளதாகவும், எந்த கட்சிகளுக்கு எந்த துறையை ஒதுக்க வேண்டும் என குளறுபடி இருப்பதாக தெரிவந்துள்ளது.

மேலும் பாஜக சார்பில் முக்கிய துறையாக கருதப்படும் உள்துறை, கல்வி, வெளியுறவு, ராணுவம், தகவல் தொழில்நுட்பம், சட்டம் போன்ற முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக்கொள்ள விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: நாயுடு vs கவுடா நீர்வளத்துறை அமைச்சர் பதவிக்கு பேரம்!! தத்தளிக்க போகும் தமிழகம்!!