நடிகர் சூர்யா நடத்தும் இவர்களுக்கான முகாம்! திட்டமிட்டு உள்ளார்!

நடிகர் சூர்யா நடத்தும் இவர்களுக்கான முகாம்! திட்டமிட்டு உள்ளார்!

தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கத்தின் காரணமாக உலகத்தின் பல்வேறு மூலைகளிலும், அனைத்து மக்களையும் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைய வைத்துள்ளது. இதனை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி திட்டத்தை அவசரகால மற்றும்  போர்க்கால அடிப்படையாக நாட்டில் பயன்படுத்துகின்றன. அனைவருக்கும் தடுப்பூசிகளை போட அறிவுறுத்தி வருகிறது.

இதில் ஐந்து கம்பெனிகளின் தடுப்பூசிகள் பயன்படுத்தப் படுகிறது. கொவேக்சின்,  கோவிட் ஷீல்டு,ரெம்டிசிவர், ஸ்புட்னிக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் போன்ற நிறுவனங்களின் தடுப்பூசிகளை பயன்படுத்துகிறது. இதில் சில ஊசிகளின் தட்டுப்பாடு காரணமாக பலருக்கு தடுப்பூசிகள் கிடைக்காமல், மக்கள்  திண்டாடும் வண்ணமும், சில சமயங்களில் சூழ்நிலை அமைந்து விடுகிறது.

தற்போது உள்ள இக்கட்டான சூழ்நிலையில் நடிகர்,நடிகைகள் பலரும் தொடர்ந்து விழிப்புணர்வு வீடியோக்களை டிவி வாயிலாகவும், இணையதளங்கள் வாயிலாகவும் ஏற்படுத்தி வெளியிட்டு வருகிறார்கள். மேலும் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டதையும் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு பகிர்ந்து கொள்கிறார்கள். அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயமாக வற்புறுத்துகிறார்கள்.

தங்களின் தடுப்பூசி போட்ட புகைப்படங்களை வெளியிட்டு மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் தடுப்பூசி போட்ட புகைப்படத்தை வெளியிட்டனர். மேலும் நடிகர் சூர்யா தடுப்பூசி முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா பட நிறுவனம் ஒன்றை வைத்துள்ளார். அதற்கு  2D என்று பெயரிட்டுள்ளார். அதில் பல ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். மேலும் அவரது பட வேலைகளை கவனிக்கவும் பல ஊழியர்கள் தனியாக உள்ளார்கள்.

மேலும் இவரது பட நிறுவனம் தயாரிக்கும் படங்களிலும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் பணியாற்றுகிறார்கள். எனவே இந்த தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த ஊழியர்கள் அனைவரும் தங்களின் குடும்பத்தாருடன் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக ஒரு பெருந்தன்மையான மனதுடன் இந்த தடுப்பூசி முகாமை சூர்யா வழிநடத்துகிறார்.

ஏற்கனவே அவரிடம் பணியாற்றும் தனது பட நிறுவனம் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தன் சொந்த செலவில் இன்சூரன்ஸ் பாலிசியும்  எடுத்துக் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment