பஞ்சாங்கத்தில் ஐந்து அங்கங்கள் முக்கியமானதாக கூறப்படுகிறது. அவற்றுள் திதி என்பது மிகவும் முக்கியமானது. திதியை பிடித்தால் விதியை வெல்லலாம் என்ற கருத்தும் உள்ளது. திதிக்கு அவ்வளவு முக்கியத்துவம் உள்ளது. அமாவாசை அன்று சிறிதும் வெளிச்சம் இல்லாமல் இருளாக இருக்கும். அதன் பிறகு சிறிது சிறிதாக வெளிச்சம் உருவாகி தான் பௌர்ணமி தோன்றுகிறது. அதாவது சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையக்கூடிய காலம்தான் அமாவாசை.
அதன் பிறகு சூரியனிடம் இருந்து சந்திரன் சிறிது சிறிதாக விலகி சுற்றி வருகிறார் அதுதான் வளர்பிறை. இவ்வாறு 14 திதிகள் சுற்றி இறுதியாக 15 ஆம் திதியான பௌர்ணமியில் வந்து சந்திரன் நிற்பார். அதன் பிறகு பௌர்ணமியில் இருந்து தேய்ந்து கொண்டே வந்து அமாவாசையில் மீண்டும் சந்திரன் நிற்பார். அமாவாசையில் ஒரு திதி, பௌர்ணமியில் ஒரு திதி என சந்திரன் மொத்தம் 30 திதிகளை உருவாக்குகிறார்.
இந்த முப்பது திதிகளும் அதாவது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேவதைக்கு உரிய நாளாக கூறப்படுகிறது. அமாவாசை நாட்களில் ஒருவர் பிறந்து விட்டால் அவரது ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் எந்தக் கட்டத்தில் இருக்கின்றனர், எந்த இடத்தை அவர்கள் பார்க்கின்றனர், அவ்வாறு அவர்கள் பார்க்கக்கூடிய தேவதை யார் என்பதை வைத்துதான் அவரது வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து கூற முடியும்.
இவ்வாறு இருக்கையில் சூரியனின் பார்வை நன்றாக இருந்தால் அவர்களது வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். அதே போன்று சந்திரனின் பார்வையும் நன்றாக இருந்தால் அவர்களது வாழ்க்கையும் நன்றாக இருக்கும். குருவும் சரியான இடத்தில் அவரது ஜாதகத்தில் இருந்தால், அமாவாசை நாளில் அவர் பிறந்ததினால் அவரது வாழ்க்கை இன்னும் சிறப்பாகவே அமையும்.
ஒருவர் அமாவாசை நாளில் பிறந்து இருக்கிறார் என்றால் அவரது ஜாதகத்தில் சூரியன் சந்திரன் பார்வை நன்றாக இல்லை என்றால்,அவரது வாழ்க்கையில் அதிகமான பிரச்சனை ஏற்பட்டு கொண்டே இருக்கிறது, ஏதேனும் ஒரு பிரச்சனை தேடி வந்து கொண்டே இருக்கிறது என்று கவலை கொண்டிருந்தால் அவர் நித்திய பூஜை என்று சொல்லக்கூடிய வழிபாட்டினை செய்வது நல்லது. நித்திய பூஜை என்பது தினமும் நமது பித்ருகளை வழிபடும் பூஜையாகும். தினமும் வீட்டின் ஈசானி மூலையில் இன்று நமது பித்ருகளை நினைத்து எனது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாட்களில் பித்ருகளை நினைத்து விரதம் இருந்து எள் தர்ப்பணம் செய்து வழிபட வேண்டும். தர்ப்பணம் செய்த அந்த எள் தண்ணீரை ஒரு மரத்தின் அடியில் ஊற்றி விட வேண்டும். பிறகு காகத்திற்கு சாதம் வைத்து பித்ருக்களை நினைத்து நமக்கு வேண்டியதை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
அமாவாசை நாட்களில் பிறந்த வருக்கு பல கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கிறது, பல தடைகள் வந்து கொண்டே இருக்கிறது என்று நினைப்பவர்கள் இந்த வழிபாட்டினை செய்யும் பொழுது அனைத்து தடைகளும் நீங்கி ஒரு நிம்மதியான வாழ்க்கையினை பெறலாம்.