வீட்டில் பிரண்டை செடி வளர்க்கலாமா..?? அஸ்ட்ராலஜரின் உண்மையான விளக்கங்கள்..!!

Photo of author

By Janani

வீட்டில் பிரண்டை செடி வளர்க்கலாமா..?? அஸ்ட்ராலஜரின் உண்மையான விளக்கங்கள்..!!

Janani

முந்தைய காலங்களில் வீடு என்பது ஒன்று இருந்தாலே, அதனை சுற்றி தோட்டங்கள் தான் இருக்கும். அந்த தோட்டத்தில் பல்வேறு வகையான செடி கொடிகளையும், கால்நடைகளையும் வளர்த்து வருவது தான் நமது முன்னோர்களின் வழக்கம். ஆனால் தற்போதைய காலங்களில் தோட்டம் அமைப்பதற்கு என ஒரு இடம் கிடைப்பது இல்லை. எங்கு பார்த்தாலும் வீடுகள், பிளாட்டுகள் என கட்டி விட்டனர்.

நமது முன்னோர்கள் அனைத்து விதமான காய்கறிகள், பழங்கள், மூலிகைச் செடிகள் என அனைத்தையும் நமது வீட்டிலேயே வைத்து வளர்த்து வந்தனர். ஆனால் தற்போதைய காலத்தில் அதனை வளர்ப்பதற்கு என இடமில்லாமல், மாடித்தோட்டம் வைத்து ஒரு சிலர் வளர்த்து வருகின்றனர்.

இவ்வாறு தற்போதைய தலைமுறையினர் அவர்களுக்கு தேவையான துளசி, பிரண்டை, கற்றாழை இது போன்ற மூலிகை செடிகளை மாடி தோட்டங்களில் வளர்த்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் பிரண்டை செடிகளை வீட்டில் வளர்க்கக்கூடாது, வளர்த்தால் கஷ்டம் வரும், இழப்பு ஏற்படும் என தவறான கருத்துக்களை பரப்பி மக்களை பயமுறுத்தி வருகின்றனர்.

மூலிகை செடிகள் அனைத்தும் மருத்துவம் ரீதியாகவும், ஆன்மீகம் ரீதியாகவும் நமது வீட்டில் வைத்து வளர்ப்பது என்பது மிகவும் நல்லது. கற்றாழை, பிரண்டை இது போன்ற மூலிகை செடிகள் நமது உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக பிரண்டை என்பது கார்பன் இணைப்பையே முறிக்கக் கூடிய தன்மை கொண்டது.

எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு, ஜவ்வு தேய்மானம் இது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் பிரண்டை என்பது ஒரு நல்ல தீர்வாக இருக்கும். எனவே தான் நமது முன்னோர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் இந்த மூலிகை செடிகளை வளர்த்து வந்தனர். குறிப்பாக பிரண்டை செடி இல்லாத வீடுகளே கிடையாது.

இந்தப் பிரண்டையில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. நமது முன்னோர்கள் இந்த பிரண்டை துவையலை வாரத்திற்கு இரண்டு முறை என கண்டிப்பாக உணவில் எடுத்துக் கொள்வர். இதனால்தான் நமது முன்னோர்கள் தேக ஆரோக்கியத்திலும், உடல் வலிமையிலும் சிறந்து விளங்கினர். இந்த பிரண்டைக்கு வஜ்ரவல்லி என்று இன்னொரு பெயரும் உண்டு.

பிரண்டை செடியை நமது வீட்டில் வளர்த்தால் வாஸ்து ரீதியாகவும், ஆன்மீகம் ரீதியாகவும் பிரச்சனைகள் ஏற்படும் என்ற கருத்துக்களை கூறுவது முற்றிலும் தவறான ஒன்று. மூலிகைச் செடிகளை நமது வீட்டில் வளர்ப்பதற்கும், வாஸ்து சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

நமது ஜாதகத்தில் நடக்கக்கூடிய தசா புத்திகள், பிறப்பு தசா புத்திகள், பூர்வ புண்ணிய ஸ்தானம், பித்ரு ஸ்தானம், விரைய ஸ்தானம், தொழில் ஸ்தானம் என பல்வேறு முக்கியமான விஷயங்கள் நமது ஜாதகத்தில் உள்ளது. நமது குடும்பம் முன்னேற்றம், குடும்ப பிரச்சனை, தொழிலில் சரிவு இது போன்றவைகள் ஏற்படுவதற்கு காரணம் நமது ஜாதகத்தில் ஏதேனும் ஒரு பிரச்சனைகள் இருப்பதால்தான். எனவே மூலிகைச் செடிகளை நமது வீட்டில் வளர்ப்பதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.